🇮🇳✴தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு_* சென்னை: மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🇮🇳✴தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு_* சென்னை: மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயி

✴தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு_*

சென்னை: மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்றார். அரசுத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரமணாக தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்படும் என்றார். 1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு சீருடையும், 6 - 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வேறு வண்ண சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கம் மாணவர்களுக்கு வேறு வண்ணத்திலான சீருடை என மூன்று வண்ணங்களில் சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

வரும் காலங்களில் 2 செட் பள்ளி சீருடைகள் மற்றும் 2 செட் சீருடைகள் வாங்கத் தேவையான பணத்தையும், மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். CBSE பாடத்திட்டத்தறிக்கு இணையாக அடுத்த 3 மாதங்களுக்குள் கல்வி திட்டம் முறையாக மாற்றியமக்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வடிவிலான கையேடு தரப்படும் என்றார். இதில் கேள்வி மற்றும் விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் என்றார். இந்த சி.டி வடிவிலான கையேடு சுமார் 30 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். 

*_✴🇮🇳✴சென்னையின் 3-வது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்பட துவங்கியது : விரைவில் தென்மாவட்ட ரயில்கள் இயக்கம்..!_*

தாம்பரம்: தலைநகர் சென்னையில் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. ரயில் முனையமாக மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று இரவு 9.45 மணிக்கு வாராந்திர விரைவு ரயிலான கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்றது. முதல் நாளிலேயே தாம்பரத்திலிருந்து பல பயணிகள் அந்த ரயிலில் பயணித்தனர். மேலும் தாம்பரம் ரயில் நிலையம், ரயில் முனையமாக செயல்படத் துவங்கியது மகிழ்ச்சியளிப்பதாகவும் பயணிகள் கூறினர்.ரயில் முனையமாக மாற்றப்பட்டுள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி வைக்க, ஸ்டே லைன்கள், பிட் லைன்கள், பெட்டியை தூய்மை படுத்துதல், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.      

இதே போல படிக்கட்டுகள், லிப்ட், பேட்டரி கார் போன்ற வசதிகளையும் பயணிகளுக்காக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக தாம்பரம் ரயில் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் தென்மாவட்ட ரயில்கள் பல இங்கிருந்து இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here