மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள், மருத்துவத் துறையில்தான் சேர வேண்டும் என விரும்பும் மாணவர்கள் மருத்துவத்துக்கு அடுத்தபடியாக உள்ள துணை மருத்துவப் படிப்புகளுக்குத்தான் விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 23ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று (ஆகஸ்ட் 7) அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்...
1. பி.எஸ்சி (நர்ஸிங்) - செவிலியர்களை உருவாக்கும் படிப்பு
2. பி.பார்ம் (பார்மஸி) - மருந்தியல் துறை வல்லுநர்களை உருவாக்கும் படிப்பு
3. பி.பி.டி (பிசியோதெரபி) - முடநீக்கியல் துறை
4. பி.ஏ.எஸ்.எல்.பி (அகெளஸ்டிக்ஸ் மற்றும் லேங்வேஜ் தெரபி ) - செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்
5. பி.எஸ்சி (ரேடியோலஜி) - X ray, Scan போன்றவை குறித்த படிப்பு.
6. பி.எஸ்சி (ரேடியோதெரபி) - ரேடியோ கதிர்களைக் கொண்டு நோய் நீக்கும் துறை
7. பி.எஸ்சி (எமெர்ஜென்சி & ட்ராமா கேர் ) - விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைகள் குறித்த படிப்பு
8. பி.எஸ்சி (மெடிக்கல் லேப் டெக்னீசியன்) - ரத்தம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் நோய் கண்டறியும் ஆய்வுகள் குறித்த படிப்பு
9. பி.எஸ்சி (மெடிக்கல் ரெக்கார்ட் சைன்ஸ்) - பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிப்பது குறித்த படிப்பு
மேற்கண்ட படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் நேற்று (ஆகஸ்ட் 7) முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டுக்குக் கட்டணம் ரூ.400-க்கான டி.டி. கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். ‘‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற பெயரில் டி.டி. எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவக் கட்டணம் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக