ஆடும் ஆட்சியில் பதவிகள் எதற்கு? தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முத்துக்குமாரசாமி விலகிக்கொண்டதையடுத்து, நேற்று ஆகஸ்ட் 30ஆம் தேதி மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணன் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த விஜய் நாராயணன், 1982ஆம்  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆடும் ஆட்சியில் பதவிகள் எதற்கு? தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முத்துக்குமாரசாமி விலகிக்கொண்டதையடுத்து, நேற்று ஆகஸ்ட் 30ஆம் தேதி மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணன் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த விஜய் நாராயணன், 1982ஆம் 


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முத்துக்குமாரசாமி விலகிக்கொண்டதையடுத்து, நேற்று ஆகஸ்ட் 30ஆம் தேதி மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணன் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த விஜய் நாராயணன், 1982ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. எனப்படும் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன்பின் அப்போதைய மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரத்திடம் சேர்ந்து வழக்கறிஞர் தொழிலைக் கற்றார். ப.சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும்வரை அவருடன் பணியாற்றினார் விஜய் நாராயணன். பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்திய விஜய் நாராயணன் பாரம்பர்யமான வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜய் நாராயணன் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்தான் என்றாலும்... முதலில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் இளைய மகன் அரவிந்த் பாண்டியனின் பெயர்தான் அரசியல் வட்டாரங்களில் அடிபட்டது. பி.ஹெச்.பாண்டியன் குடும்பத்துக்கு ஏதேனும் ஒரு பதவி வேண்டும் என்று அணிகள் இணைப்பின்போதே நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அரசு வழக்கறிஞர் பதவிக்கு அவரது மகன் அரவிந்த் பாண்டியன் பெயர் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பி.ஹெச்.பாண்டியனின் குடும்பத்தினர் அரசு தலைமை வழக்கறிஞர் பதவி வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.

இதன் பின்னணி பற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது... “தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு பி.ஹெச்.பாண்டியன் மகன் அரவிந்த் பாண்டியனும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு கே.பி.முனுசாமியும்தான் நியமிக்கப்பட இருந்தார்கள்.

ஆனால், தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் 20-க்கும் மேற்பட்டார் முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதில் இருந்து ஆட்சி ஆட்டம்காணத் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மேடையிலும், இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று சொல்லிவருகிறார். ஆனால், உண்மையில் இந்த ஆட்சி ஆடிப்போயிருக்கிறது. அதனால், இந்த ஆட்சியின் அரசுப் பதவி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியும் எழுகிறது.

இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து பி.ஹெச்.பாண்டியன் தன் மகன் அரவிந்த் பாண்டியனுக்குத் தலைமை அரசு வழக்கறிஞர் பதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

இதேபோல தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இப்போது இருக்கும் தளவாய் சுந்தரத்தை மாற்றிவிட்டு, அந்த இடத்துக்கு கே.பி.முனுசாமியைக் கொண்டுவரவும் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கே.பி.முனுசாமியோ, ‘ஆட்சி இப்போதோ, அப்போதோ என்று இருக்கும் நிலையில் இந்த டெல்லி பதவியில் இருப்பதைவிட வலிமையான கட்சிப் பதவியில் இருப்பதே நல்லது’ என்று எண்ணி டெல்லி பிரதிநிதி பதவியை ஏற்கத் தயங்குகிறாராம். ஆக, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கே இந்த ஆட்சியின் ஆயுள் பற்றிய ஆரூடம் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அரசுப் பதவிகளை ஏற்க வாய்ப்புகள் இருந்தும் மறுத்து வருகின்றனர்” என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here