பிஎஸ்எல்வி சி-39: கவுன்ட் டவுன் தொடங்கியது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிஎஸ்எல்வி சி-39: கவுன்ட் டவுன் தொடங்கியது


பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று (ஆகஸ்ட் 30) பிற்பகல் துவங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சார்பில் நாளை (ஆகஸ்ட் 31) பிஎஸ்எல்வி வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதாகும். 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது.

இஸ்ரோ இதுவரை ஏழு செயற்கைக் கோள்களைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுட்காலம் நிறைவடைய இருப்பதைத் தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து இந்தச் செயற்கைக்கோள் நாளை மாலை 7 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 29 மணிநேர கவுன்ட் டவுன் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இது நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here