தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையா?


‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை 4 முறை சந்தித்து இருக்கிறோம் என்றும், விலக்கு அளிக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று(ஆகஸ்ட் 16)செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரை 4 முறை சந்தித்து இருக்கிறோம். அதேபோல்,விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

எனவே தற்போது, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஆணைக்கு இணங்க ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரைக் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாட திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும். 7 ஆயிரத்து 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால் தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை.இனி வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருக்காது என்று அமைச்சர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here