வாஞ்சிநாதன் - ஆஷ்துரை பற்றிய கட்டுகதைகள் இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வாஞ்சிநாதன் - ஆஷ்துரை பற்றிய கட்டுகதைகள் இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது?


 கடந்த கால வரலாற்றை எளிதாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ள இக்காலத்திலேயே இப்படி புளுகுகின்றார்கள் என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படியெல்லாம் புளுகியிருப்பார்கள்.


 தோழர். Soman Raja : தி இந்து தமிழ் நாளிதழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதன் பற்றிய பேட்டி ஒன்றை அவரது மகள்வழிப் பேரன் என்று சொல்லி ஜெயகிருஷ்ணன் என்பவரிடம் வாங்கி வெளியிட்டுள்ளது.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றபோது நிர்கதியாக நின்ற தனது பாட்டி (வாஞ்சிநாதன் மனைவி) ஒரு கர்ப்பிணி என்றும் அந்த நேரத்தில் முத்துராமலிங்க தேவர்தான் அவரை தன் கூண்டு வண்டியில் ஏற்றி சுற்றித்திரிந்து தலைமறைவாக வைத்து காப்பாற்றினார் என்றும் அந்த பேட்டியில் அவர் சொன்ன செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது இந்து. வாஞ்சிநாதன் ஆஷ்துரையை கொன்ற நாள் 1911 ஜூன் 17. முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1908 அக்டோபர் 30. ஆக ஆஷ்துரை கொல்லப்பட்ட போது முத்துராமலிங்கத் தேவருக்கு வயது 2 வயது 8 மாதம். இந்தக்குழந்தை தான் வாஞ்சிநாதன் மனைவியை மூன்று மாதகாலம் தன் கூண்டு வண்டியில் வைத்து சுற்றியதாக புனையப்பட்டுள்ளது.
வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றதே வர்னாஸ்ரமத்தை மீறுகிறார் என்கிற சனாதன வெறியால் தான். அதற்கு அவனது கடிதமே சான்று. இந்த நிலையில் இப்படிப்பட்ட பொய்ப் பித்தலாட்டங்கள் வேறா? Dhalapathi Raj

thagadoor.sampath:திருநெல்வேலியின் ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. 

அதில் ஜெயகிருஷ்ணன் என்பவர், நான்தான் வாஞ்சிநாதனின் மகள் லட்சுமியின் மகன் என்கிறார். 

வாஞ்சிநாதன் ஆஷை கொலைசெய்த பிறகு, கர்ப்பமாயிருந்த அவரது மனைவி பொன்னம்மாளை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்ற மூன்று மாதங்கள் கூட்டு வண்டியில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தாராம் முத்துராமலிங்கத் தேவர். 

குழந்தை பிறந்த பிறகு, கந்தர்வக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை ஒப்படைத்தாராம் தேவர். பிறகு, சென்னையில் ஒரு வீட்டில் பொன்னம்மாளை ரகசியமாக வைத்து காப்பாற்றினாராம் அவர். 

முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது அக்டோபர் 30, 1908. வாஞ்சிநாதன் ஆஷை கொலைசெய்தது ஜூன் 17, 1911. ஆக. மூன்று வயதுக் குழந்தையாக இருந்த முத்துராமலிங்கத் தேவர், கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார்.

4 வயதிலேயே 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்தாராம். அன்றைக்கு தங்கத்தின் விலை கிராம் 1.80 காசு. 25000 ரூபாய்க்கு தோராயமாக 13890 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அப்படியானால், இன்றைய மதிப்பில் சுமார் 3,85,44,750 ரூபாய்!! இவ்வளவு பணத்தை ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்து ஒரு குழந்தையைப் பாதுகாக்கச் சொல்கிறது மற்றொரு குழந்தை.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். இந்தக் கட்டுரை குறித்துப் பேசுவதற்காக, தான் இப்போது இந்து அலுவலகத்திற்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார்.

வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லட்சுமி, ஜெயகிருஷ்ணன் ஆகியோர் யாரேன்றே தங்கள் குடும்பத்திற்குத் தெரியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here