அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தது.
இதன்படி விரிவான வரைபடம் மற்றும் விளக்கத்துடன் வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் தாக்குதல் குறித்து வெளியிடப்பட்டது.
இது பற்றி வடகொரியா ஏவுகணைப் பிரிவு தளபதி கிம் ராக்கி யோம் கூறியதாவது: அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் துல்லியமாக தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.
இந்த தாக்குதலின் போது ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகள் செலுத்தப்படும், அந்த ஏவுகணைகள் ஜப்பானின் வான் எல்லைகள் வழியே சென்று குவாம் தீவைத் தாக்கும்.
இதனால் தற்போதிலிருந்தே அமெரிக்கா உஷாராக செயல்பட்டு வருகின்றது. ராணுவம் மற்றும் போர்க்கப்பல்களை தயாராக வைத்துள்ளது. எதிரியை எப்படி சமாளிப்பது என்று அமெரிக்கா ராணுவம் அதிபருடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக