கூடி வந்தால் கோடி நன்மை! சொல்வது நிதியமைச்சர் ஜெயக்குமார்......... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூடி வந்தால் கோடி நன்மை! சொல்வது நிதியமைச்சர் ஜெயக்குமார்.........


ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும் 5ஆம் தேதி தினகரன் வருவதாகவும், அன்று முதல் கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். தினகரனின் இந்த திடீர் அறிவிப்பால் முதல்வர் பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காகக் கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி நடத்தினார்.

ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்றும்வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் விரும்புவது கூடி வந்தால் கோடி நன்மை. நாங்கள் யாரையும் விடக் கூடாது, எல்லோரும் தேவை என்ற அடிப்படையில் இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. விரைவில் சுமுகத் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சரியாக சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மற்றவர்கள் பற்றி கவலைப்படுவதாக இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. தமிழக அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். இதை வைத்து அ.தி.மு.க. அவர்களுடன் இணையப்போகிறது என்று நினைத்துவிடக் கூடாது. கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here