கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தரமையா தலைமையிலான மந்திரி சபையில் எரிசக்திதுறை அமைச்சராக பதவி வகித்து வரும் டிகே ஷிவகுமார் இல்லத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தவிர, கர்நாடகாவில் குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கனகபுரா, சதாஷிவநகர் ஆகிய இடங்களில் உள்ள அமைச்சர் ஷிவகுமார் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் எரிசக்தி துறை அமைச்சராக இருப்பவர் சிவகுமார். இவரது வீடு பெங்களுரில் அமைந்துள்ளது. இவருக்குச் சொந்தமான ஈகிள்டன் கோல்ப் விடுதியில் தான் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குஜராத் காங்கிரஸ் எம். எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்குத் தாவி வருகின்றனர். தற்போது வரை 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவி விட்டனர். இதனால் காங்கிரசின் பலம் 57-ல் இருந்து 51 ஆகக் குறைந்து உள்ளது. எனவே மேல்-சபை எம்.பி. தேர்தல் நடந்து முடியும் வரை மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் தடுக்க காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருவில் உள்ள ‘ஈகிள்டன்’ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை ந்டத்தினர். மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்குச் சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து அதிரடியாகச் சோதனை செய்து வருகின்றனர். குஜராத் எம்எல்ஏக்களுக்கு பணம்பட்டுவாடா நடப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக