அமெரிக்காவைத் தாக்க வட கொரியா தேதி குறித்துவிட்டது! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அமெரிக்காவைத் தாக்க வட கொரியா தேதி குறித்துவிட்டது!


அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அந்நாட்டின் குவாம் தீவைத் தாக்க வல்ல ஏவுகணைச் சோதனையை நடத்த வட கொரியா திட்டமிட்டிருகிறது.

“அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியைத் தாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாகப் பரிசோதித்து வருகிறோம்” என்று வட கொரியாவின் ராணுவத் தகவல்களை வெளியிடும் கே.சி.என்.ஏ. ஊடகம் தெரிவித்துள்ளது. “அதிபர் கிம் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபட நினைத்தால் அதற்கான விளைவை அந்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதற்குச் சில மணி நேரங்களில் வட கொரியா தரப்பில் இம்மாதிரியான பதில் தரப்பட்டுள்ளது.

வட கொரியாவின் இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, “நாங்கள் வெறும் ராணுவ தடவாளப் பகுதி மட்டுமல்ல. அமெரிக்காவின் மண். குவாம் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்

சர்வதேச சட்டதிட்டங்கள், ஒப்பந்தங்கள், ஐ.நா-வின் விதிகள் எல்லாவற்றையும் மீறி அணு ஆயுதச் சோதனை நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபட்டுவருகிறது. அத்துடன் அதிநவீன ஏவுகணைச் சோதனைகளையும் நடத்திவருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதையடுத்து வட கொரியாமீது கடுமையான பொருளாதாரத் தடையை விதிக்க ஐ.நா-வில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்தத் தீர்மானத்துக்குக் கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் உள்ள 15 நாடுகளும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கின.

இந்தத் தடை குறித்து வட கொரியா, “எங்கள் நாட்டின் அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. அமெரிக்கா எங்களை மிரட்டி வந்தாலும், நாங்கள் அணு ஆயுதம் தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர மாட்டோம்” என்று கூறியிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார். “வடகொரியா அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. இல்லை என்றால் அவர்கள் இதுவரை இந்த உலகம் காணாத விளைவைச் சந்திப்பார்கள்” என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here