ட்ரம்புக்குச் சீனா கண்டனம்! அணிசேரும் நாடுகள் .....மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் உலகில் புல் பூண்டுகள் முளைக்குமா? ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ட்ரம்புக்குச் சீனா கண்டனம்! அணிசேரும் நாடுகள் .....மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் உலகில் புல் பூண்டுகள் முளைக்குமா? ?


வட கொரியா அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரியா தீபகற்பத்தில் வட கொரியா அரசு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்தி வருகிறது. அதேபோல், கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளைக் கடந்த ஒரே மாதத்தில் வட கொரியா வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. அதன் காரணமாக, அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியா நாட்டின்மீது ஐ.நா. சபை புதிய பொருளாதாரத் தடையை கடந்த சில நாள்களுக்கு முன்பு விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க வேண்டிவரும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து, வட கொரியாவுக்குப் பதில் தெரிவிக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி எடுத்து வருகிறது.

இதனால், ஆத்திரமடைந்த வட கொரியா ராணுவம், அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதைக் கேட்டுக் கடும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘வட கொரியா கடுமையான ஊழிக்காலப் பேரழிவைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று நேற்று (ஆகஸ்ட் 9) மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வட கொரியா அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ட்ரம்ப் மிரட்டலுக்குச் சீனா நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுவதாவது, ‘கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் சூழல் மிகவும் சிக்கலானதாகவும், உணர்வுபூர்வமானதுமாக இருக்கும் நிலையில் இதில் தொடர்புடைய இரு நாடுகளும் தங்கள் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டோக்லம் விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை அதிகாரி வாங் லீ பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். “இந்திய, சீனா நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் படைகளைக் குவிக்கும் இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இரு நாடுகளின் எல்லைகளும், நேபாளத்தின் எல்லையும் சந்திக்கும் உத்தரகாண்ட்டின் கல்பானி பிராந்தியத்திலோ அல்லது பாகிஸ்தானுடனான எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்குளோ சீன ராணுவம் நுழைந்தால் அதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா?” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று மாநிலங்களவையில் பேசுகையில், நாட்டின் பாதுகாப்புக்காக எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்தியப் பாதுகாப்புப் படைகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here