வரும் 2020ஆம் ஆண்டுக்குள் காலணி உற்பத்தியில் சீனாவை விட அதிக உற்பத்தி செய்யும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று மத்திய இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச காலணி கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசும்போது "சர்வதேச அளவில் காலணி தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. உள்நாட்டுத் தேவையில் 95 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தோல் பொருள் ஏற்றுமதியில் காலணிப் பொருட்களின் பங்கு 45 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதை உயர்த்த தரமான காலணி தயாரிப்பில் ஈடுபட நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி-யால் இத்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதுகுறித்து பரிசீலிக்கப்படும். காலணி தயாரிப்புத் துறையை ஊக்குவிக்க அரசு முழு ஆதரவை வழங்கும்" என்று அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக