வட கொரியா மீது பொருளாதாரத் தடை கொண்டுவந்த அமெரிக்க தீர்மானத்திற்கு சீனா ஆதரவு! இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா யார் பக்கம்? ..?..? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வட கொரியா மீது பொருளாதாரத் தடை கொண்டுவந்த அமெரிக்க தீர்மானத்திற்கு சீனா ஆதரவு! இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா யார் பக்கம்? ..?..?


வட கொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் தாவி அழிக்கும் ஏவுகணைகளால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, வட கொரியாமீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் கொண்டுவந்தது.

அந்தத் தீர்மானம் ஆகஸ்டு 5ஆம் தேதி எந்தவித எதிர்ப்பும் இன்றி 15-0 என்ற வாக்கு விகிதப்படி நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை முன்மொழிந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் பேசிய அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி, “வட கொரியாவின் அச்சுறுத்தல் என்பது நமக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே எதிரானது. இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்காமல் நாம் முட்டாளாக இருக்க முடியாது.

இந்தத் தீர்மானத்தோடு நின்றுவிடக் கூடாது. இதை செயல்படுத்தும் நடவடிக்கைகள் தேவை. அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உறுதியாக மேற்கொள்ளும். ஆதரவளித்த நாடுகளும் தீர்மானத்தை செயல்படுத்த தொடர்ந்து முனைப்பு காட்ட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தின்மூலம் வட கொரியாவின் இரும்பு, இரும்புத் தாது, நிலக்கரி, கடல் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி தடைபடும். மேலும் இனி வட கொரியாவுடன் எந்த நாடும் பொருளாதார ரீதியான இரு தரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதை இந்தத் தீர்மானம் தடை செய்கிறது. வட கொரியர்கள் வெளிநாடுகளில் பணி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் பெரும் தடையாக இருக்கும்.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை வட கொரியாவின் அண்டை நாடும், வட கொரியாவுடன் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் நாடுமான சீனாவும் ஆதரிப்பது அமெரிக்காவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் கவுன்சலில் இருக்கும் ரஷ்யாவும் வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில், “வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடை தீர்மானத்தை ஆதரித்த சீனாவையும் ரஷ்யாவையும் பாராட்டுகிறேன். இது வட கொரியாவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைக் கொடுக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here