கலப்புத் திருமண தனிப்பிரிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்க காவல் துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கலப்புத் திருமண தனிப்பிரிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்க காவல் துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு


சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்க காவல் துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்றிருக்கிறது. இது குறித்து இன்று (ஆகஸ்ட் 08) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சி இதைத் தெரிவிக்கிறது. அந்த அறிக்கை கூ றுவதாவது:

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும், செய்பவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க காவல் துறையில் தனிப் பிரிவு உருவாக்க வேண்டுமென்றும், சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலா தேவியின் கணவர் திலீப் குமார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆதரவோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் காவல் துறையில் தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென்றும் கடந்தாண்டு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பு அமல்படுத்தப்படாமல் இருந்ததால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு ஆகஸ்டு 10 அன்று விசாரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்கக் காவல் துறையில் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என்று ராமகிருஷ்ணன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here