1996 ஆம் ஆண்டு கேரளாவில் இகே.நாயனார் முதல்வராக இருந்தபோது, பிரனாயிவிஜயன் மின்சார அமைச்சராக இருந்தார். அப்போது கனடா நாட்டு எஸ்என்சி-லாவ்லின் நிறுவனத்துடன் கேரளாவில் மின் உற்பத்தி நிலையம் அமைத்திட ஒப்பந்தம் ஏற்பட்டது.
அச்சமயத்தில் கேரள அரசு கேன்சர் சிகிச்சை மருத்துவமனை ஒன்று கட்டி வந்தது! அதற்கு இந்த லாவ்லின் நிறுவனத்தில் இருந்து லஞ்சம் பெற்றப்பட்டது என்பதே வழக்கு!
பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு பிரனாயி விஜயன் மீதும், கம்யூனிஸ்ட் அரசுமீதும் அவதூறு பொழியும் கெட்ட நோக்கத்துடன் துளியும் ஆதாரமின்றி பொய்யாக இந்த வழக்கை ஜோடித்தது!
இதனை விசாரித்த விசாரனை நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து பிராயியை அப்பொழுதே விடுவித்தது!
ஆனால் இதனை ஏற்காமல், சிபிஐ 2014 ஆம் ஆண்டு கேரள உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
தற்போது (23.8. 2017) கேரள உயர்நீதி மன்றம் அன்றைய மின்துறை அமைச்சரும், இன்றைய கேரள முதல்வருமான பிரனாயி விஜயனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது; அதோடு, "மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அரசியல் காழ்புணர்ச்சி அடிப்படையில் வேண்டுமென்றே சேர்த்து உள்ளது" எனவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்தே... "லாவ்லின் வழக்கு அரசியல் ரீதியாக பொய்யாக புனையப்பட்ட ஒன்று!" என்று கூறி வந்தது; அதையே கேரள உயர்நீதி மன்றமும் தற்போது உறுதி செய்து உள்ளது!
மார்க்சிஸ்ட்கள் மடியில் என்றுமே கணம் இருந்தது இல்லை; ஊழல் ஒரு நாளும் மார்க்சிஸ்ட்களை நெருங்காது; இந்த வழக்கைத்தான் சங்கிகளும் "குய்யோ முய்யோ"ன்னு கத்திக்கொண்டு திரிந்தன காங்கிரஸ்சுடன் சேர்த்துக் கொண்டு!
என்னத்தான் ஜோடித்தாலும், அதை சுக்கு நூறாக்கி, ஜோடித்தவர் முகத்திலேயே கரிப்பூசும் நெருப்பு ஜுவாலைகள் மார்க்சிஸ்ட்கள் என்பதை மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல நீதி மன்றத்திலும் நிரூபித்து வந்தே உள்ளார்கள்; அதுதான் இதிலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக