பிராவுக்கு டாட்டா சொல்லும் டா டா டவல்! -அ.ஐஸ்வர்யா லட்சுமி - பெண்கள், பெண்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத அசௌகரியமான விஷயமாகக் கருதுவது உள்ளாடை பிரச்னை. பொதுவாகவே உள்ளாடைகள் பற்றிச் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல ....... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிராவுக்கு டாட்டா சொல்லும் டா டா டவல்! -அ.ஐஸ்வர்யா லட்சுமி - பெண்கள், பெண்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத அசௌகரியமான விஷயமாகக் கருதுவது உள்ளாடை பிரச்னை. பொதுவாகவே உள்ளாடைகள் பற்றிச் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல .......


பெண்கள், பெண்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத அசௌகரியமான விஷயமாகக் கருதுவது உள்ளாடை பிரச்னை. பொதுவாகவே உள்ளாடைகள் பற்றிச் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் தவறான அளவுடைய உள்ளாடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். இதனால் பல பிரச்னைகளால் பாதிக்கப்படுக்கின்றனர். இதை நன்கு அறிந்த முதலாளித்துவ மேற்குலக சமுதாயம், பெண்கள் உள்ளாடை தயாரிப்பு வியாபாரத்தில் தனி யுக்தியைக் கையாண்டு வருகின்றன. பெண்களுக்கான மார்பக உள்ளாடையான பிராவை ஒரு மோகப் பொருள் போன்ற பிம்பத்தை உருவாக்கி இதன்மூலம் பல கோடிகள் சம்பாதிக்கின்றன.

மோகப் பொருளாக விற்கப்படும் மார்பக உள்ளாடை பிரச்னைக்கு லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஏரின் ராபர்சன் என்னும் பெண் ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளார் ‘டா டா டவல்’ புதுமையான உள்ளாடையை அவர் வடிவமைத்துள்ளார். உறிஞ்சக்கூடிய துணியினால் உருவாக்கப்பட்ட ஆடை இது. மார்பகங்களைத் தாங்கி பிடித்து, மார்பகங்களை மட்டும் மறைக்கக்கூடிய வடிவமைப்பில் உள்ளாடையை உருவாக்கி, உலகப் பெண்கள் மத்தியில் பெருத்த கைதட்டலைப் பெற்றுள்ளார் .

பார்ப்பதற்கு ‘பிகினி’ உடை போலக் காட்சியளிக்கும் இந்த உள்ளாடை முழுக்க முழுக்கத் துணியினால் உருவாக்கப்பட்டதே இதன் சிறப்பு அம்சம். ஏரின் ராபர்ட்சன் ஒருநாள் டேட்டிங் செல்லும்போது தான்பட்ட அவஸ்தையின் விளைவாகத்தான் இந்த ‘டா டா டவல் பிரா’வை வடிவமைத்ததாகத் தன் வலைதளத்தில் கூறியுள்ளார்.

அப்படி என்ன சிரமப்பட்டார் என அவர் வலைதளத்தில் ஆராய்ந்து பார்த்தபோது அவரது அனுபவத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தன் காதலனோடு முதல் தடவை டேட்டிங் செல்லக் கிளம்பிக்கொண்டிருக்கும்போது, அவர் வீட்டின் குளிர்சாதனப் பெட்டி வேலை செய்யவில்லை. டேட்டிங் டென்ஷனில் பலமுறை குளித்தும், குளித்து முடித்து வெளியில் வந்த அடுத்த நிமிடத்திலிருந்து அவருக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டதாம். இத்தனைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் குளிர்ப் பிரதேசம். டென்ஷனால் உடல் முழுவதும் வியர்த்தது மட்டுமல்லாமல் மார்பகங்களுக்குக் கீழ் அதிகப்படியாக வியர்த்துக் கொட்டியதாம்.

உடல் முழுவதும் குழந்தைகளுக்கான பவுடரைக் கொட்டி வியர்வையை நிறுத்த முயற்சி செய்துள்ளார். பின் டி-ஷர்ட் அணிந்து, ஒரு துணியைத் தன் மார்பகங்களுக்கு அடியில் வைத்திருக்கிறார். ஆனாலும் வியர்வை நிற்கவில்லை. “சில நிமிடங்களில் மார்பகத்துக்கு அடியில் வைத்த துணியின் இயல்பே மாறிப்போயிருந்தது. குழந்தைகளுக்கான பவுடர், என்னை ஒரு மாவுப் படலத்துக்குள் ஆழ்த்தியதுபோல ஆக்கிவிட்டது. டி-ஷர்ட் அதிகமான வியர்வையை உருவாக்கியது” என்று தான்பட்ட சங்கடத்தை யதார்த்தமாகத் தன் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் ஏரின்.

குளிர் பிரேதேசமான லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் பெண்ணுக்கே இந்த நிலை என்றால், கோடைக்குத் தாய் நாடான இந்தியாவில் இருக்கும் பெண்களின் கதி என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இதெல்லாம் ஒரு பிரச்னையா எனச் சிலர் கேட்கலாம். ஆனால், இது பல பெண்களுக்கும் உள்ள முக்கியமான பிரச்னை.இதனால் பல அசௌகரியங்கள் ஏற்படும். அதிகமாக வியர்க்கும்போதும், மூச்சுவிடும்போதும் சிரமங்கள் உண்டாகும். நாள்பட சரும அழற்சிகள் ஏற்படும்.

இப்போதிருக்கும் பெரும்பாலான பிராக்கள் உடலில் அதிக வியர்வை சுரக்கும் வகையில் இருக்கின்றன. வியர்வை தேங்கி மார்பகப் பகுதியில் சரும அழற்சி உண்டாகவும் காரணமாக இருக்கின்றன. டா டா டவல் பிரா இதற்குச் சிறந்த தீர்வளிக்கும் எனத் தெரிவிக்கிறார் ஏரின். பிரா அணிந்து வியர்வை தேங்கி சரும அழற்சியால் அவதிப்பட்டுவந்த தனது தோழிக்கு, இந்த டா டா டவல் நல்ல மாற்றத்தை உணரச் செய்ததாகவும். இதைப் பயன்படுத்த ஆரம்பித்த சில நாள்களிலேயே சரும அழற்சி குறைய தொடங்கியது என்றும் ஏரின் ராபர்ட்சன் கூறியுள்ளார்.

இந்த டா டா டவல் பெண்கள் மிகவும் சௌகரியமாக உணரப் பல வகைகளில் உதவுகிறது. வீட்டில் சாதாரணமாக இருக்கும்போது, பீச் செல்லும்போது மற்ற பிராக்களை உடுத்துவதற்கு மாறாக இந்த டா டா டவல் பிராக்களை அணியலாம். பாலூட்டும் அம்மாக்களுக்கு, வீட்டில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க நினைக்கும் பெண்களுக்கு இது சிறந்த பலனளிக்கும் என்கிறார் ஏரின் ராபர்ட்சன். அனைத்து வயதினருக்கும் சிறந்த வகையில் உதவும் இந்த டா டா பிரா, சி முதல் ஹெச் வரையிலான அளவுகளில் தற்போது கிடைக்கிறது.

சரியான அளவாக இருப்பினும் இதர வகை பிராக்களை அணியும் போது பெண்களுக்கு இந்த வியர்வைப் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த அசௌகரியத்தை இந்த டா டா பிரா முற்றிலும் போக்கும் என்பதோடு, இதை உடுத்துவதும் கழற்றுவதும் மிகவும் எளிமையானது.

சமூக வலைதளங்களில் இது உலகப் பெண்களின் பெரும் ஆதரவைப் பெற்றுவருகிறது.

இந்த டா டா டவல் பிரா சி முதல் ஹெச் வரையிலான உள்ளாடை அளவுகளில் தற்போது tatatowel.com என்னும் online shopping website கிடைக்கிறது.

* சி முதல் ஹெச் வரையிலான உள்ளாடை அளவில் கிடைக்கும் இந்த டா டா பிரா tatatowel.com என்னும் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தில் உலக அளவில் விற்கப்படுகிறது

https://www.tatatowel.com/

தொகுப்பு: அ.ஐஸ்வர்யா லட்சுமி

Reference: https://www.tatatowel.com/about


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here