நடிகைகள் தங்கள் கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுத் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது வழக்கமாக நிகழ்வதுதான். இப்போது அந்த நிலை சற்றே மாற்றமடைந்து, நிர்வாணப் படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது கவர்ச்சிப் படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு அவர், ‘நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. எனது புகைப்படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். இந்தப் புகைப்படத்தை வைத்து இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி’ என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இஷா குப்தாவைத் தொடர்ந்து நடிகை கல்கி கோச்லின் தனது நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் நிர்வாணத்தை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மிட்-டே இதழிடம் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்தப் புகைப்படத்தைப் பெண் புகைப்படக் கலைஞரான ரிவா எடுத்தார். இதுவரையில் ஆண் புகைப்படக் கலைஞர்களின் பார்வையில் தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், இந்த போட்டோ ஷூட்டில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து நான் ஒரு பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டதால் இந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தேன்” என்றார்.
இந்தப் புகைப்படத்தைப் பதினைந்தாயிரம் பேர் லைக் செய்திருந்தாலும் பலர் கடுமையாகத் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். “ஊடக விளம்பரம் மற்றும் கிசுகிசு செய்திகளுக்காக மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். பெண்ணுரிமை என்று சொல்வது பொய்” என்று பலர் விமர்சித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக