*வரலாறாகும் போராட்டம்*
வரலாற்று சிறப்புமிக்க ஜாக்டோஜியோ போராட்டத்தின் வாயிலாக இதுவரை நிலைநிறுத்தப்பட்டவை
> > > > > >
1. *நீதிமன்ற தடையை, அவமதிப்பை மீறியது* போராட்டங்களை யாரும் எளிதில் தடுக்க முடியாது என்பதை உணர்வுபூர்வமாக அடையாளப்படுத்தியது.
2. *தினம் தினம் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது* நியாயத்தின் குரலையும் தனிமனித கொதிப்பையும் வரலாற்றில் பதிவு செய்தது.
3. *போராட்ட நாட்களுக்கு சம்பளம் பிடிக்காதது & ஒழுங்கு நடவடிக்கை இல்லாதது*
அரசின் மிரட்டல் தற்காலிகமானது, போராட்ட அலை நிரந்தரமாக எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் என்பதை நிரூபித்து மீண்டும் போராடும் துணிவை கொடுத்துள்ளது.
4. *கோரிக்கைகள் நிறைவேற்ற ஒவ்வொன்றுக்கும் கெடு தேதி விதித்தது*
நம்பமுடியாத அமைச்சர்கள் கொடுக்கும் வாக்குறுதியை விட உத்தரவாதமான எழுத்துப்பூர்வ உத்தரவாய் மாற்றியமைத்தது.
5. *தலைமைச் செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைத்தது* பேச்சுவார்த்தைக்கே அழைக்காத அரசை தலையில் தட்டி இழுத்து வந்து வழக்கமான இழுத்தடிப்பிற்கு கண்டனம் தெரிவித்து இறுதிமுடிவை உடனடியாக தெரிவிக்க நெருக்கடி கொடுத்து
காலநிர்ணயம் செய்ய வைத்தது.
6. *நமது போராட்டம் நியாயமானது என நீதிமன்றம் அறிவித்தது* நீதிமன்றத்தின் வழி நமது நியாயத்தையும் அரசின் அநீதியையும் மறைக்க முடியாத வரலாற்று ஆவணங்களாய் உருமாற்றியது.
7. *தனிநபர்களை உழைக்கும் வர்க்கமாய் பிரதிநிதிப்படுத்தியது*
சங்க பாகுபாடுகளைத் தாண்டி நேரடி களச் சிக்கல்களை தாண்டி மகத்தான உழைக்கும் வர்க்கத்தின் அங்கமாய் ஒவ்வொருவரையும் உணர வைத்தது.
இறுதியாய் *நமக்கான அரசியல்*எதுவென கோடிட்டு காட்டி *உழைக்கும் மக்களுக்கு எதிரான சங்க உள்அரசியல், அரசின் எதிர்அரசியல், ஊடக சார்புஅரசியல்* போன்றவற்றை அழுத்தமாக நமக்கு உணர்த்திய ஜாக்டோஜியோ போராட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கும் அரசுக்கும் பல பாடங்களை சுட்டிக் கொண்டேயிருக்கிறது.
அனுபவங்களை உள்வாங்கி அடுத்தகட்ட நகர்வுக்கு திட்டமிடுவோம்;
திட்டமிட்ட முடிவுகளை ஒன்றுபட்டு செயல்படுத்துவோம்.
*போராட்டங்கள் நம்மை நியாயப்படுத்தும்*
*போராட்ட பயணத்தை தொடர்வோம்...*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக