*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்தி*
*இன்று ஜேக்டோ ஜியோ போராட்டம்,அது சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்*
*ஜேக்டோ ஜியோ சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R.பிரசாத் ஆஜரானார்.*
*முற்பகல் 1 மணி 20 நிமிட நேரமும்,பிற்பகல் 40 நிமிடங்களும் வழக்கு விசாரணை நடைபெற்றது.*
*வழக்கு விசாரணையில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது,பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதம் அதிக நேரம் நடைபெற்றது.*
*புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள்,அத்திட்டத்தில் உள்ள ஊழியர்களின் எதிர்காலம்,இத்திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு ஆகியவை தொடர்பாக நமது வழக்கறிஞர் மிக ஆழமாக,விரிவாக,புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்*
*தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017க்குள் பெறப்படும் என்று தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்*
*மேலும்,ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசின் விளக்க அறிக்கை மற்றும் நிலைபாடு 23.10.2017ல் நடைபெறும் அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் என்றும் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்*
*ஊதியக்குழு அறிக்கை 30.09.2017க்குள் பெறப்பட்டு,அதை அமல்படுத்தும் தேதி 13.10.2017க்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்*
*அதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் தர அரசு முடிவெடுக்க வேண்டும்.இல்லையேல் நீதிமன்றமே முடிவெடுக்கும்*
*வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது*
*போராட்ட நாட்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்யப்பட வேண்டும்.*
*வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியப்பிடித்தம் செய்யக்கூடாதுஎன்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*இன்றைய நீதிமன்ற வழக்கு நிகழ்வுகளில் நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்.ச.மோசஸ்,பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும்,தோழமைச்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்*
*தோழமையுடன்-செ.பாலசந்தர், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக