இன்றைய செய்திகள் 18/09/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்திகள் 18/09/2017

*_🌴🌴தமிழ் இணைய
செய்திகள்🌴🌴_*
  •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
           *_18/09/2017_*
  •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴சாந்தோம் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம்_*

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சென்னையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம்,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக பல்வேறு கல்வித்தகுதிகளுடன் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு, கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறையில் உடனடியாக பணியமர்த்தம் செய்ய தனியார் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் செப்டம்பர் 26ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வரவேண்டும். 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_✴🇮🇳✴தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 நாட்களில் 10 ஆயிரம் கழிவறைகள் கட்டி முடிப்பு_*

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கென்டியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர் “ என்னுடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில் 10 ஆயிரம் கழிவறைகள் பத்தே நாட்களில் கட்டப்பட்டுள்ளதை முதன் முதலில் இப்போதுதான் பார்க்கிறேன். அபன்பூரில் கடந்த 7ம் தேதி தான் 10 ஆயிரம் வீடுகளில் கழிவறைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது அனைத்து கழிவறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தூய்மையான இந்தியா என்பது மகாத்மா காந்திக்கு மக்கள் செலுத்தும் சிறந்த மரியாதையாகும். கழிவறைகள் கட்டி முடிப்பதற்காக திறமையாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

*_✴🇮🇳✴சென்னையில் புதிய தமிழகம்  கட்சி அக்.6ல் மாநாடு_*

கோவை: புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற பேரணி மற்றும் மாநாடு வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடத்தப்பட உள்ளது.  தேவேந்திர குல வேளாளர் எஸ்சி பட்டியலில் இருந்து விடுவிக்க மத்தியஅரசுக்கு மாநில அரசு சிபாரிசு செய்ய வலியுறுத்தியும், மத்தியஅரசின் சமூகநலத்துறை மூலமாக அந்த பட்டியலில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தியும் இந்த மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார். 

*_✴🇮🇳✴மேட்டூருக்கு நீர்வரத்து சரிவு_*

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,523 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,847 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 6,523 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பை காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 76.95 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 77.16 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 39.18 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், விநாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

*_✴🇮🇳✴புதுகை அருகே துப்பாக்கிகளுடன் 5 பேர் சிக்கினர்_*

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தோட்டத்தில், கடந்த சில நாட்களாக 5 பேர் தங்கியிருந்தனர்.  அவர்கள் துப்பாக்கிகள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள்  வைத்திருந்ததை சிலர் பார்த்துள்ளனர். இந்தநிலையில், நேற்று சம்பவ இடத்துக்கு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்றனர். பின்னர் அங்கிருந்த இளையராஜா உள்ளிட்ட 5 பேரை பிடித்தனர். இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய கார், 3 பைக், குண்டுகளுடன் இருந்த துப்பாக்கிகள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். பின்னர் 5 பேரையும் கரூருக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_✴🇮🇳✴திருச்சியில் டெங்குவுக்கு சிறுமி பலி_*

திருச்சி:  திருச்சி புத்தூர் மதுரை வீராசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் கிட்டு (எ) கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ராஜேஸ்வரி(10). அங்குள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 நாட்களாக ராஜேஸ்வரிக்கு காய்ச்சல் இருந்தது. டாக்டர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. 2 நாட்களுக்கு முன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்து பார்த்ததில், ராஜேஸ்வரிக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று முந்தினம் மாலை ராஜேஸ்வரி இறந்தார்.

*_✴🇮🇳✴ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் 2வது நாளாக ஸ்டிரைக்_*

பென்னாகரம்:  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 22,000 கனஅடி வரையில் தண்ணீர் வந்ததால், கடந்த 1ம் தேதி பரிசல் இயக்கத்திற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. நீர்வரத்து குறைந்ததையடுத்து கடந்த 15ம் தேதி பரிசல்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பரிசல் துறையில் இருந்து, மாமரத்துகடவு கண்காணிப்பு டவர் வரை மட்டுமே இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு பரிசல் ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பரிசல்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக பரிசல்களை அவர்கள் இயக்கவில்லை. இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here