*பட்டாசு, போதும் !* *ரொம்ப பட்டாச்சு !!* ------------------------------------ *நாம் அன்றாடம் கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்களுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.* *ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*பட்டாசு, போதும் !* *ரொம்ப பட்டாச்சு !!* ------------------------------------ *நாம் அன்றாடம் கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்களுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.* *ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125

*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*

*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*

*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*

*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*

*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*

*நீர்*
------

*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*

*நிலம்*
------------

*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*

*நெருப்பு*
-----------------

*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*

*காற்று*
--------------

*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*

*ஆகாயம்*
------------------

*21 நச்சு இரசாயனங்கள் வளி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*

*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*

*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள்.*

*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை பாதிப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய்*

*இவை அனைத்தும் நம்முடைய அறியாமையால், தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*

*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*

*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*2 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*3 - நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*3 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது*

*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*

*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*

*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*

*சமுதாய பாதிப்புகள்*
---------------------------------------

*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*

*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*

*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*

*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*

*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*

*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*

*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*

*நீ வெடிக்கும் பட்டாசு "உனக்கு நீயே தோண்டிக் கொள்ளும் உன் புதைகுழி" என்று இப்பொழுதாவது புரிகிறதா ?*

*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*

*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*

*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*

*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*

*பண்பாடு*
-------------------

*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*

*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*

*இன்று*

*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்து விட்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம்.*

.*

*இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.*

*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*

*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*

*வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி (ஐப்பசி 1 ) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.*

*பட்டாசுகள் ஒழியட்டும்*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும்*

*பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.*


*பட்டாசு தொழிலாளிகளுக்கு மாற்று தொழில் வழங்குவோம்*
*
.
*ஏழைகளுக்கு உணவளிப்போம்.*

*விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்மொழி பிரச்சாரம் செய்வோம்.*

*இயற்கையோடு இயைந்த, இயற்கையை பேணி பாதுகாக்கும் விழாவான பொங்கலை மட்டும் சிறப்பாக கொண்டாடுவோம்.*

*நன்றி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here