*BIG BREAKING NEWS:*
*ஆட்டம் முடிந்தது....*
*தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு.*
*சபாநாயகர் தனபால் அளித்த விளக்க நோட்டிசுக்கு பதில் அளிக்காததால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர்.*
*கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை.*
*தகுதி நீக்கம் இது வரை நடந்து என்ன...*
*தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியா அறிவித்துள்ளார்.*
*தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.*
_முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர்._
_கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்._
_இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்._
_நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது._
_இந்நிலையில் விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்._
_கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்._
_இதனையடுத்து குடகு சொகுசு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்._
_சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது._
*அரசு கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்.*
*1986-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விதிப்படி, 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு.*
*முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி, ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
*இதுவே முதல் முறை.....*
*தமிழ் நாடு அரசியல் வரலாற்றில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது இதுவே முதல் முறை.*
*தினகரன் ஆதரவு, 18 எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் எதிர்ப்பார்த்த ஒன்றுதான் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.*
*⚫🔴 திமுக கருத்து*
*18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் ஜனநாயக படுகொலை - திமுக முதன்மை செயலர் துரைமுருகன் பேட்டி.*
*களத்தில் நின்று உண்மையான வெற்றிபெற முடியாதவர்கள் செய்யும் செயல் இது - துரைமுருகன்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக