ஆளுநர் பொய் சொன்னார்: தீபக் ,, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஜெயலலிதாவின் அண்ண - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆளுநர் பொய் சொன்னார்: தீபக் ,, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஜெயலலிதாவின் அண்ண


ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் பொய்” என்று தெரிவித்துள்ளார். ஆளுநர் வந்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை என்றும், அந்தச் சமயத்தில் தானும் மருத்துவமனையில் இருந்ததாகவும் தீபக் கூறி உள்ளார்.

மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பின்னர் மூன்று நாள்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாகவும் தீபக் கூறியுள்ளார்.

இட்லி சாப்பிட்டதாகப் பொய் சொன்னோம் என்று அமைச்சர் பேசிய பரபரப்பு அடங்கும்முன், ‘சில காலத்துக்குப் பின் சசிகலாவே பார்க்கவில்லை’ என தினகரன் சொன்னார். அடுத்தபடியாக ஆளுநர் பொய் சொன்னதாக தீபக் சொல்லியிருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here