இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு! மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச சிவி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு! மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச சிவி


மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் சட்டப் பிரிவு 196இல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 ஜனவரி 2001ஆம் ஆண்டுக்குப் பின் அரசு அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றுவோர் ஆகியோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இச்சட்டத்தின் கீழ் 2 பயிற்சி நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார். மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி. இத்தகவலை போபால் உயர் நீதிமன்றப் பதிவாளர் முகமது ஃபாஹிம் அன்வர் நேற்று (செப். 25) தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3ஆவது குழந்தை பெற்றதையடுத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். பதவியை இழந்த நீதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டுதான் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here