போர்ப் பிரகடனம் செய்யவில்லை: ட்ரம்ப் வட கொரியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர்ப் பிரகடனம் செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ரி யாங் யோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அமெரிக்காவின் நிலைகளைத் தகர்க்க - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

போர்ப் பிரகடனம் செய்யவில்லை: ட்ரம்ப் வட கொரியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர்ப் பிரகடனம் செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ரி யாங் யோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அமெரிக்காவின் நிலைகளைத் தகர்க்க


வட கொரியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர்ப் பிரகடனம் செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ரி யாங் யோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அமெரிக்காவின் நிலைகளைத் தகர்க்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

நியூயார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யோங் யோ, “கிம் ஜாங் உன்னின் தலைமை நீண்ட நாள் நிலைக்காது. வட கொரியாவை அழிப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது எங்கள் நாட்டின் மீதான போர்ப் பிரகடனம்தான். எனவே வட கொரிய எல்லைக்கு அப்பாலிருந்தாலும் அமெரிக்கப் போர் விமானங்கள், கப்பல்களைத் தாக்கி அழிப்போம்” என்று கூறினார். இந்தக் கடும் எச்சரிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று 25.9.2017 வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஹக்காபி சான்டர்ஸ் ஒரு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வட கொரியா மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்யவில்லை. அதிபர் ட்ரம்ப் அப்படி எங்கும் சொல்லவுமில்லை. காரணமே இல்லாமல் ஒரு நாட்டின் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது இன்னொரு நாட்டுக்கு அழகல்ல..

ஒரு நாட்டின் வான் எல்லையில் இருக்கும் விமானங்களை மற்றொரு நாடு சுட்டு வீழ்த்துவோம் என்று கூறுவது சர்வதேச நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. அமெரிக்காவின் இலக்கில் மாற்றமில்லை. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதையே அமெரிக்கா விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here