ஆட்சியை கவிழ்க்கப்போவது திமுகவா? ... தினகரன் அதிமுகவா ?....சரியான போட்டி .........பிஜேபி காப்பாற்றுமா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆட்சியை கவிழ்க்கப்போவது திமுகவா? ... தினகரன் அதிமுகவா ?....சரியான போட்டி .........பிஜேபி காப்பாற்றுமா?




“கடந்த ஒரு வார காலமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் 6 பேர் சத்தமில்லாமல் ஒரு சீக்ரெட் ஆபரேஷனில் இறங்கி இருக்கிறார்கள். ‘நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். தினகரன் பக்கம் 21 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் நம்ம பங்குக்கு எடப்பாடி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கொஞ்சம் பேரை இழுத்து வைக்கணும். அவங்க இப்போதைக்கு வெளியே வரத் தேவை இல்லை. ப்ளோர் டெஸ்ட் வரும்போது எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கணும். அதுக்கு நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு எம்.எல்.ஏ.வை நம்ம பக்கம் இழுக்கணும். எல்லோரு கிட்டயும் சொன்னா விஷயம் வெளியே லீக் ஆகிடும். அதனால நீங்க ஆறு பேரு மட்டும் சத்தமில்லாமல் ஆளுக்கொரு எம்.எல்.ஏ.வை நம்ம பக்கம் வர்றதுக்கு பேசி முடிங்க’ என இருந்து உத்தரவு போயிருக்கிறது.

திமுக மாவட்டச் செயலாளர்களும் கடந்த ஒரு வாரமாக அதற்கான ஆட்களைத் தேர்வுசெய்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு பாசிட்டிவ் ரிப்ளை வரவில்லை. திமுக தரப்பில் இருந்து அடுத்து சொல்லப்பட்ட விஷயம், ‘நீங்க யாரும் இப்போ எதிராக செயல்படப் போறீங்கன்னு யாருக்கும் தெரியாது. அதுவும் திமுகவுக்கு ஆதரவாகவும் நாங்க கூப்பிடலை. ப்ளோர் டெஸ்ட் வரும்போது ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கணும். அதுக்கு என்ன வேணுமோ அதை நாங்க செய்ய தயாராக இருக்கோம். இப்பவே வேண்டுமானாலும் செஞ்சு கொடுக்கத் தயாராக இருக்கோம்...’ என்று வலைவிரிக்கப்பட்டுள்ளது.

முதலில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ. இந்த டீலுக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். இப்படி தென் மாவட்டத்தில் இருவர், வட மாவட்டங்களில் இருவர், மத்திய மண்டலத்தில் ஒருவர் என மொத்தம் 6 எம்.எல்.ஏ.க்கள் இந்த டீலுக்கு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கொண்டார்களாம். இன்னும் ஒரு சில நாட்களில் அவர்கள் கேட்டது எல்லாம் செய்து கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள். இந்த தகவல் வந்ததும், அசைன்மெண்ட் கொடுத்தவர் செம ஹேப்பியாகிவிட்டாராம்.

‘ஒருவேளை தினகரனுடன் இருக்கிறவங்க சிலர் பல்டி அடிச்சாலும் நாம ரெடி பண்ணி வெச்சிருக்கிறவங்க ஆட்சியைக் கவுத்துடுவாங்க...’ என உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல.. ‘அந்த 6 பேரும் ஓகே சொல்லிட்டாங்கன்னு அப்படியே இருந்துட வேண்டாம். தொடர்ந்து அவங்களோட தொடர்பில் இருங்க.. எப்போ யாரு மாறுவாங்கன்னு சொல்ல முடியாது..’ என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் 6 பேரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள்!” 

“எப்படியாவது ப்ளோர் டெஸ்ட் வந்துடும்.. ஆட்சி கவிழ்ந்துடும் என திமுக நினைச்சுட்டு இருக்கு... ஆனா, அதிமுக தரப்பு கணக்கு வேற மாதிரி இருக்கு. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டியது ஆளுநர்தான். ஆளுநருக்கு வேறு சில அதிகாரமும் இருப்பதால், அதை வைத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. எடப்பாடிக்கு இந்தக் கணக்கு டெல்லியிலிருந்து விளக்கப்பட்டிருக்கிறது.

‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால், ஆளுநர் நினைத்தால் அவர் அதிகாரத்துக்கு உட்பட்டு, ‘தேர்தல் முடிந்து இன்னும் இரண்டு வருடங்கள்கூட ஆகாத சூழ்நிலையில் இன்னொரு தேர்தல் அவசியம் இல்லை. அதனால், சிம்பிள் மெஜாரிட்டி என்ற ஒரு விதிப்படி, ஆறு மாத காலம் இப்போது இருக்கும் ஆட்சிக்கு அவகாசம் கொடுக்கலாம். அப்படி அவகாசம் கொடுத்தால் ஆறு மாத காலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் முடியாது. ஆட்சியையும் கலைக்க முடியாது. ஆறு மாதத்துக்குள் தினகரன் பக்கம் இருப்பவர்களை வளைத்துவிடலாம். பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையே படாது... நீங்க தைரியமாக இருங்க... நாங்க பார்த்துக்குறோம்’ என சொல்லி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் தைரியமாக இருக்கிறாராம் எடப்பாடி! 

இதற்கிடையே திண்டுக்கல் திமுகவின் முப்பெரும் விழாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என துரைமுருகன் கூறியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here