உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்ற JACTTO-GEO போராட்டத் தடை குறித்த வழக்கில்,
☀நீதி மன்றத் தீர்ப்பை மீறி செயல்படும் நிலையில் எதிர்த்தரப்பின் விவாதத்தைத் துளியும் ஏற்க மறுக்கும் நீதி மன்ற மரபினைத் தாண்டி,
☀45 நிமிடங்கள் JACTTO-GEO தனது தரப்பு விளக்கத்தை அளித்தது.
☀எனினும், நீதி மன்ற உத்தரவிற்குக் கீழ்ப்படிய JACTTO-GEOவிடம் அறிவுறுத்தப்பட்டது.
☀இதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் திரும்பப் பெற இயலாது என JACTTO-GEO கூறியது.
☀இறுதியில், போராட்ட நியாயத்தை உணர்ந்து கொண்ட நீதிமன்றம், கோரிக்கை நிறைவேற்றத்திற்கான உறுதியை அளித்தது.
☀போராட்டத்தை முடித்துக் கொள்ள கேட்டுக்கொண்டது நீதிமன்றம்.
☀நீதி மன்ற உத்திரவாதத்தை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்க JACTTO-GEO ஒப்புதல் கூறியது.
☀தலைமைச் செயலரை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் வழிகாட்டியது.
☀அரசு தரப்பு வழக்கறிஞர் அதற்குச் சாத்தியமில்லை என மறுக்க,
☀நீதிமன்றம் உத்தரவிட்டால் வந்து தான் ஆகவேண்டுமென காட்டமாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
☀21-ம் தேதிக்குள் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பிடமிருந்து பதில் பெற்றுத்தர நீதிமன்றம் உறுதியளித்தது.
☀JACTTO-GEO இதனை ஏற்று 21.9.2017-வரை தனது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
☀இன்று (15.9.17) பிற்பகல் முதல் பணிக்குத் திரும்ப JACTTO-GEO உறுதி அளித்தது.
☀மேலும், JACTTO-GEO தனது எழுத்துப்பூர்வமான விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
☀ஊழியர் - அதிகாரிகள் - நீதிமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் முத்தரப்புப் பேச்சுவார்த்தையை JACTTO-GEO-வின் 9 நாள் வேலைநிறுத்தம் சாதித்துக் காட்டியுள்ளது.
☀நீதிமன்றமே நமது கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், நீதி மன்ற வழிகாட்டல் படி முன்னரே வழங்கப்பட்ட குற்றக்குறிப்பாணை / ஒழுங்கு நடவடிக்கைக் கடிதங்கள் மீதான பயமோ, பதிலோ இனி தேவையற்றது என்று JACTTO-GEO கூறியுள்ளது.
☀9 நாட்களாகத் தொடர்ந்து களத்தில் இருந்து நமது உரிமைக்கான தமது உணர்வினை வெளிப்படுத்தியுள்ள இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு JACTTO-GEO தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
*☀21.9.2017 பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில்,*
*☀JACTTO-GEO உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட அறிவிப்பை அறிவிக்கும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக