இந்திய வரலாற்றில் கட்சிகளின் வருமானம்: எதிர்க்கட்சி திமுக முதலிடம், ஆளும் கட்சி அதிமுக இரண்டாமிடம்! மற்ற கட்சிகளின் நிலவரம் ..... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்திய வரலாற்றில் கட்சிகளின் வருமானம்: எதிர்க்கட்சி திமுக முதலிடம், ஆளும் கட்சி அதிமுக இரண்டாமிடம்! மற்ற கட்சிகளின் நிலவரம் .....



2015-16ஆம் நிதியாண்டில் அதிக வருமானத்தை ஈட்டிய மாநில கட்சிகளில் திமுக முதலிடத்திலும், அதிமுக இரண்டாமிடத்திலும் உள்ளதாக ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் தேர்தல் ஆணையத்தில், மாநிலக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமானக் கணக்குகள் குறித்து டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ( Association for Democratic Reforms (ADR) என்னும் அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 47 மாநிலக் கட்சிகளில், 15 கட்சிகள் தங்களது வருமானக் கணக்கினைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 32 கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.முதல் கட்சியாக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி கடந்த 2016 ஜூன் 11ஆம் தேதியும், கடைசிக் கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2017ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியும் வருமான அறிக்கையை அளித்துள்ளன.

வரவு-செலவுக் கணக்கைத் தாக்கல் செய்துள்ள 32 மாநிலக் கட்சிகளின் மொத்த வருமானம் 221.48 கோடி. இதில் கட்சிகள் செலவு செய்துள்ள தொகை 111.48 கோடி,செலவு செய்யப்படாத தொகை 110 கோடி.

இதில் அதிக அளவில் வருமானம் ஈட்டியுள்ள மாநிலக் கட்சிகளில் 77.63 கோடிகளுடன் திமுக முதலிடத்திலும், 54.938 கோடிகளுடன் தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாமிடத்திலும் உள்ளன. 15.97 கோடி வருமானத்துடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது. முதல் மூன்று இடங்களிலுள்ள இந்தக் கட்சிகளின் வருமானம் 32 மாநிலக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 67 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here