நடராஜனை சந்தித்தார் சசிகலா.........உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.நட - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நடராஜனை சந்தித்தார் சசிகலா.........உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.நட


உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.நடராஜனைப் பார்க்க பரோலில் சென்னை வந்த சசிகலா, இன்று பெரும்பாக்கத்தில் இருக்கும் குளோபல் மருத்துவமனைக்குக் காலை 11.45 மணிக்குச் சென்றார். அங்கே தன் கணவர் நடராஜனை அவர் சந்தித்தார். அவர் பரோல் நிபந்தனைப்படி இன்று மருத்துவமனையில் இருந்துவிட்டு மாலை தி.நகரில் இருக்கும் வீட்டுக்குத் திரும்புவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் இன்று நடராஜனின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆயினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் இன்று (அக்டோபர் 7) காலை அம்மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘’சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பால் சிகிச்சை பெற்று வந்த நடராஜனுக்கு அக்டோபர் 4ஆம் தேதி சிறுநீரகம்,கல்லீரல் மாற்று அறுவைசிச்சை நடந்து முடிந்துள்ளது. இப்போது அவரது உடல்நிலை முன்னேறிவருகிறது. இப்போது அவர் கண் விழித்துப் பார்க்கிறார்.

மேலும், அக்டோபர் 6ஆம் தேதி நடராஜனுக்கு டிரக்யோஸ்டாமி சிகிச்சை செய்யப்பட்டு அவர் தற்போது வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கிறார்.

கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சை ஒருங்கே செய்யப்பட்டிருப்பதால் நடராஜனின் உடல் நிலை இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது’’ என்று குளோபல் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here