சென்னை அதிர்ந்தது....தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் & அடையாள மீட்பு மாநாட்டில் ; தேவேந்திர குல வேளாளர்களை SC-பட்டியலில் இருந்து விடுவித்து MBC-பிரிவில் சேர்க்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சென்னை அதிர்ந்தது....தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் & அடையாள மீட்பு மாநாட்டில் ; தேவேந்திர குல வேளாளர்களை SC-பட்டியலில் இருந்து விடுவித்து MBC-பிரிவில் சேர்க்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி தலைமையில்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இணைந்து டாக்டர்  கிருஷ்ணசாமி  தலைமையில்  சென்னை YMCA மைதானத்தில் 06/10/2017 அன்று மாநாடு நடைபெற்றது. மாநாட்டில்
தேவேந்திர குல வேளாளர்களை SC-பட்டியலில் இருந்து விடுவித்து MBC-பிரிவில் சேர்க்க வேண்டும் -தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கு பல்லாயிரக்கனக்கான தேவேந்திர குல வேளாளர்கள் கலந்து கொண்டனர். தாங்கள் நயவஞ்சகமாக பட்டியல்(Sc) பிரிவில் சேர்த்துள்ளதாகவும் தாங்கள் விவசாயம் செய்யும்
வேளாண்குடி மக்கள் எனவும் கூறுகிறார்கள்.இந்தியாவில் எந்தவொரு இனமும் பட்டியல் இனத்தை வேண்டாம் என கூற முன்வராத நிலையில் தங்களின் பழைய அடையாளமான
தேவேந்திரகுல வேளாளரின் MBC வேண்டும் எனவும் எங்களுக்கு சுயமரியாதையும் தன் உழைப்பில்  வாழ விரும்புவதாக கூறி சென்னை மாநகரின் மைய பகுதியை  நேற்று அதிரச்செய்தனர். அருகில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இருந்தும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் நடந்து கொண்டது பொதுமக்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது எனலாம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here