தமிழ் இணைய செய்திகள் 23/12/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள் 23/12/2017

•┈┈•❀🐯🌴🇮🇳🌴🕊❀•┈┈•
*-தமிழ் இணைய செய்திகள்-*

*_🐯🇮🇳🕊ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் தீர்த்தக்கிணறுகள் முன்னறிவிப்பின்றி மூடல்_*

ராமேஸ்வரம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வருகையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் தீர்த்தக்கிணறுகள் மூடப்பட்டுள்ளன. கோவில் தீர்த்தக்கிணறுகள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

*_🐯🇮🇳🕊புதுச்சேரி மக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்_*

புதுச்சேரி : புதுச்சேரி மக்கள் குறைகளை தெரிவிக்க 9500560001 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

: *_🐯🇮🇳🕊அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை_*

கன்னியாகுமரி : அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.  கிறிஸ்துமஸ் விழா மேடையை வேலியிடப்பட்ட இடத்தில் அல்லது மைதானத்துக்குள் அமைக்கவும் நீதிமன்றம் சிபாரிசு செய்துள்ளது. 

: *_🐯🇮🇳🕊பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை : திமுக எம்.பி. கனிமொழி_*

சென்னை : 2ஜி வழக்கின் தீர்ப்பை அடுத்து பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். திமுக - காங்கிரஸ் இடையேயான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் 2ஜி வழக்கில் தாம் விடுதலையானதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தம்மை தொலைபேசியில் வாழ்த்தினார் என்றும் கூறினார்.   

*_🐯🇮🇳🕊ஈரோடு அருகே சாயப்பட்டறை கழிவுகளால் மஞ்சள் நிறத்தில் மாறிய நிலத்தடி நீர் : விவசாயிகள் அதிர்ச்சி_*

ஈரோடு : ஈரோடு அருகே சித்தோடு கிராமத்தில் விவசாய கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறத்தில் அமில நெடியுடன் தண்ணீர் மாறியுள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சித்தோடு கிராமத்தில் உள்ள சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளை திருட்டுத்தனமாக ஆழ்துழை கிணறுகள் மூலம் வெளியேற்றப்படுவதே நிலத்தடி நீர் மாசடைவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்து காணப்படுவதால் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாயபட்டறை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முழுவதும் ஸிரோ டிஸ்ஜார்ஜ் முறையில் மறுசுத்திகரிப்பு மூலம் அந்த தண்ணீரை அவர்களே பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள ஆலைகள், ஆலைகளுக்கு உள்ளேயே ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக சுற்றவட்டார கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களும், விவசாய நிலங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இதே போல் ஆலைகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, பசுமை தீர்பாயம் நடவடிக்கை எடுத்து குறிப்பிடத்தக்கது.
 http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here