☀【T】【N】【P】【T】【F】
*விடுமுறைக்கால கணினிப் பயிற்சியை ரத்து செய்ய இயக்குநரிடம் TNPTF வலியுறுத்தல் : பொதுச்செயலாளர் அறிக்கை - 23.12.17*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!
வணக்கம்.
☀ஜாக்டோ-ஜியோ போராட்ட நாட்களை ஈடுசெய்யும் நோக்கில் 27.12.17 முதல் 30.12.17 வரை ஆசிரியர்களுக்குக் கணினிப் பயிற்சி வழங்க வேண்டுமென 22.12.17 தேதிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் வழி அறிவிக்கப்பட்டிருந்தது.
☀இது தொடர்பான குழப்பங்கள் & நீதிமன்ற முரண் குறித்து நேற்று (22.12.17) இரவு இயக்குநர் அவர்களிடம் தொலைபேசி வழியே விளக்கி இப்பயிற்சியினை இரத்து செய்ய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
☀முன்னதாக, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்டக்கிளை முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து தொலைபேசி வழியே இயக்குநர் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
இக்கலந்துரையாடலில், மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம்,
☀"ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையானது மாணவர்களின் கல்வி நலனை முன்வைத்தே போராட்ட காலத்தை ஈடுசெய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனை விடுத்து ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி என்பது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறிச் செயல்படும் முரணான நடவடிக்கை ஆகும்.
☀மேலும், நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு இனங்க பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆணைப் படியும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் உத்தரவின் படியும், உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தின் வழிகாட்டல் படியும், சில இடங்களில் தலைமையாசிரியர்களின் முன்முயற்சியிலும், ஈடுசெய்யும் நாட்களுக்கான வேலைநாட்கள் திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது. நடைபெற்றும் வருகிறது.
☀நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாகவும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமலும் தங்களின் தற்போதைய செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀மேலும், இரண்டாம் பருவ இறுதி நாளில் வெளியாகியுள்ள இத்தகைய அறிவிப்பானது, விடுமுறைக் காலத்தை முன்வைத்து சொந்தப் பணிகளைத் திட்டமிட்டு வைத்திருந்த ஆசிரியர்கள் மத்தியிலும், கிறிஸ்துமஸ் & புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான தொடர்பணிகளைத் திட்டமிட்டிருந்த ஆசிரியர்கள் மத்தியிலும், குறிப்பாக பல்கலைக்கழகத் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள உயர்கல்வி பயிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அழுத்தத்தையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
☀எனவே, *நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு முரணாக*வும், பணி நிமித்தம் இடம்பெயர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் இரண்டாம் பருவ இறுதி காலத்தில் *ஆசிரியர்களை மன உளைச்சல் உள்ளாக்கும் விதத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள* பயிற்சியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித நேரடி / மறைமுகப் பலனை உண்டாக்காத வகையில் இருப்பதால் *இப்பயிற்சியினை இரத்து செய்ய வேண்டும்*." என்று வலியுறுத்தப்படட்டுள்ளது.
☀மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்களும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.
☀இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
☀மேலும், *27.12.2017-ல் மதுரை*யில் நடைபெறவுள்ள *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்* என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
_தோழமையுடன்_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*-http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக