பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்-2018 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்-2018

பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்-2018

     @தமிழ் இணைய செய்திகள்@
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_🌴🐯🇮🇳🕊🌴உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்: அருண் ஜெட்லி பேச்சு_*

டெல்லி: தற்போது உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைகளால் நேரடி அந்திய முதலீடு அதிகளவில் உயர்ந்துள்ளது. மேலும் உலகப் பொருளாதாரத்தில் 7-வது இடத்தில் இருந்து 5 -வது இடத்துக்கு இந்தியா விரைவில் எட்டும் என்று கூறினார். 

*_🌴🐯🇮🇳🕊🌴விவசாயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும் : அருண்ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய வளர்ச்சி, ஏழைகளுக்கு தரமான சுகாதார வசதி ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்று உரையாற்றினார். 8% பொருளாதார வளர்ச்சியை அடைவதிலேயே மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🌴🐯🇮🇳🕊🌴நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்வு: அருண் ஜெட்லி பேச்சு_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது . நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.  

_🌴🐯🇮🇳🕊🌴அரசு சேவைகள் அனைத்தும் ஆன்லைன் சேவைக்கு மாறியுள்ளன: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அரசு சேவைகள் அனைத்தும் ஆன்லைன் சேவைக்கு மாறியுள்ளன. சேவைத்துறையின் வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🌴🐯🇮🇳🕊🌴விவசாயிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்; விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார். மேலும் விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். 

*_🌴🐯🇮🇳🕊🌴இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு; வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு; மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*_🌴🐯🇮🇳🕊🌴விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

*_🌴🐯🇮🇳🕊🌴மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி உரை_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ரூ. 4கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

_🌴🐯🇮🇳🕊🌴கிசான் கிரெட்டி கார்டு: மீன்வளம், கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை : அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கிசான் கிரெட்டி கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
[
_🌴🐯🇮🇳🕊🌴தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும். மேலும் மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
: *_🌴🐯🇮🇳🕊🌴இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும் : அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும். உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கிறது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
தமிழ் இணைய செய்திகள்
: *_🌴🐯🇮🇳🕊🌴நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய சுகாதார மையங்கள் அமைக்கப்படும் : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கல்வி ஆராய்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் 5 லட்சம் மருத்துவ்ப மையங்கள் அமைக்கப்படும்; நாடு முழுவதும் ஒன்னரை லட்சம் புதிய சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். 
[தமிழ் இணைய செய்திகள்
‬: *_🌴🐯🇮🇳🕊🌴புதிதாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும் : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அனைத்து வட்டாரங்களிலும் பழங்குடி சமுதாய மாணவர்களுக்கு ஏகலைவ பள்ளிகள் அமைக்கப்படும். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்று புதிதாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

*_🌴🐯🇮🇳🕊🌴கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
தமிழ் இணைய செய்திகள்
*_🌴🐯🇮🇳🕊🌴புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் : அருண் ஜெட்லி_*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். மேலும் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தமிழ் இணைய செய்திகள்
*_🌴🐯🇮🇳🕊🌴10 கோடி ஏழை குடும்பங்களுக்கு சுகாதார சிறப்புத் திட்டம் அறிமுகம்: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

_🌴🐯🇮🇳🕊🌴தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காச நோயளிக்களுக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இணைய செய்திகள்
_🌴🐯🇮🇳🕊🌴2022ஆம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு :அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2022ஆம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். நடுந்தர, சிறு, குறுந் தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும். சிறு மாற்று குறு தொழில் மேம்பாட்டிற்க்காக ரூ.4000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இணைய செய்திகள்
*_🌴🐯🇮🇳🕊🌴96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசன திட்டத்திற்காக ரூ.2,600 கோடி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசன திட்டத்திற்காக ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 500 வழங்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

*_🌴🐯🇮🇳🕊🌴கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக உள்ளது: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக உள்ளது. கல்வியில் டிஜிட்டல் உபயோகத்தை அதிகரிக்கவும், கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு படிப்படியாக முன்னேறவும் நாங்கள் ஊக்கம் அளிப்போம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

தமிழ் இணைய செய்திகள்

*_🌴🐯🇮🇳🕊🌴முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி: அருண் ஜெட்லி உரை_*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப்படும். ஜவளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

*_🌴🐯🇮🇳🕊🌴பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 3% ஆக குறிப்பு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்  புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று கூறினார். 

*_🌴🐯🇮🇳🕊🌴மாற்றுத்திறனாளி, கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_🌴🐯🇮🇳🕊🌴பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும். 25,000 ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

_🌴🐯🇮🇳🕊🌴கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி ஒதுக்கீடு : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 100 ஸ்மார்ட் நகரத்திற்க்கான திட்டத்தில் 99 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 70லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

*_🌴🐯🇮🇳🕊🌴ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமனம்: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 4000க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமனம் செய்யப்படும். ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

*_🌴🐯🇮🇳🕊🌴பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும் : அருண் ஜெட்லி_*

டெல்லி :  இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 124 விமான நிலையங்களில் கூடுதல் பயணிகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்ககான புதிய ஆலை நிறுவப்படும். பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

🌴🐯🇮🇳🕊🌴ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: அருண் ஜெட்லி உரை_*

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

தமிழ் இணைய செய்திகள் www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here