- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட செய்தித் துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*🌟 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (03.02.2018) சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலக கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

🌟 ​ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.




🌟 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவருமாகிய தோழர்.ச.மோசஸ் அவர்கள் காலையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்து பேசினார்.

🌟 ​ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எழுச்சி உரையாற்றினார்கள்.


*🌟 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு ஊடகங்களுக்கு அளித்த செய்திகள் மற்றும் தீர்மானங்கள்:*


🌟 ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக இன்று 03.02.2018 சனிக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலகத்தில் காலை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் மாலை உயர்மட்டக்குழு கூட்டமும் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், 

⚡தோழர்.ச.மோசஸ்,

⚡தோழர்.மு.சுப்பிரமணியன்,

⚡தோழர்.ஆர்.தாமோதரன்,

ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

*🌟 தீர்மானம்-1:*

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 110 விதியின் கீழ் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை உடனடியாக சமர்பிக்க வேண்டும். தொடர்ந்து கால நீட்டிப்பு செய்வதை ஜாக்டோ ஜியோ வன்மையாக கண்டிக்கிறது.

*🌟 தீர்மானம்-2:*

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் மேலும் 7 வது ஊதியக்குழு இதுவரை அமுல்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்.

*🌟 தீர்மானம்-3:*

சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஊர்புற நூலகம், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி தற்போது காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்திட வேண்டும்.

*🌟 தீர்மானம்-4:*

ஊதியக்குழுவிற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் மற்றும் IAS, IPS அதிகாரிகளுக்கு மட்டும் 01.01.2016 முதல் ஊதியக்குழு மாற்றத்தின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் 01.10.2017 முதல் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். எனவே வஞ்சிக்கப்பட்டிருக்கின்ற மாதத்திற்கான நிலுவைத் தொகையினை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

🌟 மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றவில்லை என்றால் 21.02.2018 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் மறியல் நடைபெறும். அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் போராட்ட ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும். 

🌟 இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சி சுந்தர், இரா.தாஸ், மு.அன்பரசன், செ.முத்துசாமி, கே.பி.ஒ.சுரேஷ், அ.மாயவன், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் மற்றும் அனைத்து உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here