*
குற்றாலம்; மதுரையை அடுத்த கீழடியில் 4-வது கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட 3 அகழாய்வுகள் குறித்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர் 4-வது கட்ட ஆய்வை தமிழக அரசே ஏற்று நடத்தப் போவதாக கூறினார். இந்த பணிகளுக்காக ரூ.2 கோடி வரை நிதி செலவிடப்பட உள்ளதாக குறிப்பிட்டார். ஒருவருடம் நடபெறும் இந்த ஆய்விற்காக சென்ற வாரம் இடம் குறிக்கப்பட்டு ஒரு குழு அங்கு முகாமிட்டுள்ளதாக கூறினார்.
தேனி, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவட்ட அளவிலான அருங்காட்சியகம் இந்த ஆண்டு அமைக்கப்படும் என கூறினார். மேலும் அழகன்குளம், கீழடி, கொற்கை உள்ளிட்ட 4 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளதாக கூறினார். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி ஆதாரத்தொகை வந்துள்ளதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக