டமாஸ்கஸ்: சிரியாவில் கிளா்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமான குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அரசு படையினர் குளோரின் விஷவாயு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பலருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 6 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 16 பேர் முச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முச்சுத்திணறலால் ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாகவும், மற்றொரு குழந்தைக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை சிரியாவில் 197 முறை அரசுப்படையினர் ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிரியாவில் பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் பலியாகும் போர் கொடூரம் அதிகரித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக