ஆள் சேர்ப்புக்காக தெற்கு ரயில்வே தற்போது கொடுத்துள்ள விளம்பரத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் திருமிகு. பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்: - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆள் சேர்ப்புக்காக தெற்கு ரயில்வே தற்போது கொடுத்துள்ள விளம்பரத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் திருமிகு. பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:

26.02.2018

ஆள் சேர்ப்புக்காக தெற்கு ரயில்வே தற்போது கொடுத்துள்ள விளம்பரத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் திருமிகு. பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:

தெற்கு ரயில்வே நிர்வாகம் உதவியாளர்கள் மற்றும் இதர பிரிவுகளுக்கான ஆள் சேர்ப்பிற்கான விளம்பரத்தில் சில பாதகமான அம்சங்கள் உள்ளது சம்பந்தமாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

7வது மத்திய சம்பள கமிஷனின் ஒன்றாவது நிலைக்கான பல்வேறு பிரிவுகளுக்கான 62,900 காலியிடங்களை நிரப்புவதற்கு தெற்கு ரயில்வே கொடுத்துள்ள விளம்பரத்தில் தரப்பட்டுள்ள தகுதி நிர்ணயம் மிகவும் பாரபட்சமாக உள்ளது.

பூர்த்தி செய்யப்படவுள்ள 62,900 பணியிடங்களில் 53,870 பணியிடங்கள் உதவியாளர் பதவிக்கானது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஐ.டி.ஐ. அல்லது என்.சி.வி.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டுமென்ற அறிவிப்பு தெரிவிக்கிறது. இதற்கு சமமான அல்லது அதற்கு மேல் தகுதி பெற்றவர்கள் எவரும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அறிவிப்பு கூறுகிறது.

ஐ.டி.ஐ. மற்றும் என்.சி.வி.டி. தேர்ச்சி பெற்ற ஒருவர் எப்படியாவது வேலை பெற வேண்டும் என்ற முயற்சியில் மேலும் தனது தகுதியை உயர்த்திக் கொள்ள முயல்வது இயல்பானது. மிகவும் போட்டி மிகுந்த சூழ்நிலையில், வேலை கிடைக்க இவ்வாறு செய்கிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனும் இவ்வாறு செய்வது இயல்பானது. இவ்வாறிருக்கும் போது, இந்த தகுதிக்கு சமமான அல்லது அதற்கு மேலான தகுதியுள்ளவர்களை தவிர்ப்பது என்பது பெருமளவிலான விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஐடிஐ கல்வி நிலையங்கள் மிக குறைவாக உள்ளதால், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மிக குறைவாக உள்ள நிலையில் நாட்டின் இப்பகுதியில் வாழும் வேலையற்ற பெரும்பாலான இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய நிபந்தனை என்பது தமிழகத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழகத்திற்கு வெளியே உள்ள இதர பகுதி விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் பணியில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என தமிழகத்தில் உள்ளவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

2013ல் வெளியிடப்பட்ட ஆள்சேர்ப்புக்கான விளம்பரத்தைக் காட்டிலும் இப்போது வெளியிட்டுள்ள விளம்பரம் பல பாதகமான அம்சங்களை கொண்டுள்ளது. பொது பிரிவுக்கான கட்டணம் என்பது ரூ. 100 என்பதில் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேலையற்ற இளைஞர் எவ்வாறு இத்தகைய பெருந்தொகை செலுத்திட முடியும்?

கடந்த முறை எஸ்.சி. / எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. தற்போது ரூ. 250/- அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் பின்னர் இத்தொகை திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை செய்தது போல இவ்வாண்டும் கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவித்தால் எஸ்.சி. / எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் செலுத்தும் தொகையை மீண்டும் திருப்பி செலுத்தும் கூடுதல் வேலையை தவிர்க்க முடியும்.

கடந்த முறை 1. பட்டதாரிகள், 2. 10வது தேர்ச்சி பெற்றவர்கள், 3. ஐ.டி.ஐ. / என்.சி.வி.டி.  என்ற முறையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஐ.டி.ஐ. / என்.சி.வி.டி. தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. பணியில் சேருவதற்கு முன் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட உள்ளது. எனவே ஐ.டி.ஐ. / என்.சி.டி.வி. தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

இத்தகைய பாதகமான அம்சங்கள் தற்போதைய ஆள் சேர்ப்புக்கான விளம்பரத்தில் உள்ள நிலையில், தாங்கள் தலையிட்டு, ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், தற்போதைய விளம்பரத்தை திரும்ப பெற்று 2013ல் விளம்பரம் செய்தது போல் ஒரு விளம்பரத்தை புதிதாக வெளியிடும்படி அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன்.

* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here