உலகில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக குழந்தை நல அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் நல அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ உலகளவில் போர்களுக்கு மத்தியில் வாழும் குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறில் ஒரு குழந்தை வாழ்கிறது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் வாழுகின்ற குழந்தைகள், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டில் 20 கோடி குழந்தைகள் போர் பகுதிகளில் வாழ்ந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது, 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள்தான் சிரமப்படுகின்றனர். அங்கு, 5 குழந்தைகளில் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் பிற இடங்களில் வாழ்கின்றனர். இதில் இரண்டாம் இடத்தை ஆப்பிரிக்கா பிடித்துள்ளது.
மேலும், உலகில் 16 கோடியே 50 ஆயிரம் பேர் போர் உருவாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
நகரங்களிலும், பெரு நகரங்களிலும் அதிகரித்து வருகின்ற மோதல் மற்றும், நீண்டகால மற்றும் சிக்கலான ஆயுத மோதல்களும் ஆபத்தான இடங்களில் வாழுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களில், 2௦௦5 ஆம் ஆண்டிலிருந்து நடந்த 25 மோதல்களில் 73 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்கு எடுத்துக்காட்டாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் சிரியா உள்நாட்டுப் போரை கூறலாம். இதுவரை சிரியா போரில் சிக்கி 7௦௦ பேர் உயிரிழந்தனர். அதில், பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக