எடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின் ஹார்மோன்கள் சரியான இயக்கத்தில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் எடை குறைப்பது அவ்வளவு சுலபமான காரியமும் இல்லை. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் சமச்சீரின்மை காரணமாக கொழுப்பு கரைவதில் சிக்கல் ஏற்படுகிறது. வளர்சிதை மாற்றம், அழற்சி, மெனோபாஸ், க்ளுகோஸ் உட்கொள்ளல் போன்ற தீவிர உடல் செயல்பாடுகளை ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. ஹார்மோன் சமச்சீரின்மை, மனஅழுத்தம், வயது , மரபணு, வளரசிதை போன்றவற்றில் பாதிப்பை ஊக்குவிக்கிறது. தவறான வாழ்வியல் முறை, ஆரோக்கியமற்ற வளர்சிதை மாற்றம், அஜீரணம், தீர்க்க முடியாத பசி போன்றவை எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கின்றன. பெண்களில் வாழ்க்கை முறையில் அடிக்கடி ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்பட்ட ஹார்மோன் சமச்சீரின்மை உடல் பருமன் தொடர்பான நோய்களை உண்டாக்கும். ஆகவே, பெண்களின் எடை அதிகரிப்பிற்கு தொடர்புள்ள ஹார்மொன்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தைராய்டு கழுத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியானது, மூன்று ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, டி3, டி4 , கால்சிடோனின் போன்றவையாகும். வளர்சிதை மாற்றம், தூக்கம், இதயத் துடிப்பு, மூளை வளர்ச்சி போன்றவற்றை இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. சில நேரங்களில் தைராய்டு சுரப்பி, குறைவான ஹார்மோனை சுரப்பதால் தைராய்டு சுரப்பு குறைபாடு என்ற ஹைப்போ தைராய்டு ஏற்படுகிறது. எடை அதிகரிப்பு, மன அழுத்தம், மலச்சிக்கல், சோர்வு, உயர் இரத்த கொலஸ்ட்ரால், குறைந்த இதயத் துடிப்பு, போன்றவை ஹைப்போ தைராய்டுடன் தொடர்புடையது. க்ளுடேன் சகிப்பு தன்மை இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச் சூழல் நச்சு போன்றவை தைராய்டு ஹர்மொனின் குறைவான சுரப்பிற்கு காரணமாக உள்ளன. தைராய்டு பாதிப்பால் உடலில் அதிகமான நீர் தேக்கம் உண்டாகிறது. இவை கொழுப்பு அல்ல. இத்தகைய அதிக நீர் தேக்கத்தால் உடல் பருமனாக இருப்பது போல் தோற்றமளிக்கிறது. தைர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக