பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி நல்லுறவு பயணமாகச் சீனாவுக்குச் செல்கிறார் என மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாங்காயில் நடைபெற்ற இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசியபோது அவர் கூறியதாவது... “இரு நாடுகளின் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தவும் இரு தரப்பு தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் இரு நாடுகளின் தலைவர்களிடையிலான பேச்சுவார்த்தைகள் உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.
இவ்வாறு அவர் பேசியதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரிலேயே மோடி சீனாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து சீனாவுக்கு நான்காவது முறையாகச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மோடி அடுத்த மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார் என வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக