பொடுகுத் தொல்லையைப் போக்க! தலைமுடி பிரச்சினைகளில் பலருக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்பூகளை வாங்கிப் போட்டே , இருக்கும் முடிகளையும் இழந்தவர்கள் ஏராளம். ஆனால், வீட்டிலிருக்கும் பொருள்களைக்கொண்டே மிக எளிதாக பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பொடுகுத் தொல்லையைப் போக்க! தலைமுடி பிரச்சினைகளில் பலருக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்பூகளை வாங்கிப் போட்டே , இருக்கும் முடிகளையும் இழந்தவர்கள் ஏராளம். ஆனால், வீட்டிலிருக்கும் பொருள்களைக்கொண்டே மிக எளிதாக பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.



பொடுகுக்கு ஷாம்பூ போட்டால் இன்னும் அதிகமாகும். ஆகவே, முதல் வேலையாக ஷாம்பூவைத் தவிருங்கள். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவை எவையும் நம் கூந்தல் வளர்ச்சியைப் பாதிக்காது.

குறிப்பாக நமது முந்தைய காலத்தினருக்கு இப்போதுபோல் அதிகம் பொடுகு ஏற்பட்டதில்லை. அவர்கள் சொன்ன குறிப்புகளைப் பார்க்கலாம்.

பசலைக் கீரை பூஞ்சை தொற்றை அழிக்கக் கூடியது. பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

அறுகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனைத் தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

தலைக்குக் குளித்தபின்பு தலையைத் துவட்டாமல் கொஞ்சம் வினிகரைத் தண்ணீரில் கலந்து தலைக்குக் குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாகிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் வேர்க்கால்களில் பிஎச் அளவை அதிகரிக்கின்றன. அதனால் பூஞ்சைகள் தொல்லை குறைவதோடு, பொடுகையும் கட்டுப்படுத்துகிறது.

ஈரமான தலைமுடியில், கை நிறைய பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு, தலையின் வேர்க்கால்களில் படும்படியாக, நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் தலையை அலசிக் கொள்ளலாம். இப்படிச் செய்யும்போது, ஷாம்பூவைப் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடா பொடுகுத் தொல்லை நீக்கும். பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.

5 ஸ்பூன் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை எடுத்து, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டுவிடவும். காலையில் எழுந்து, நல்ல தரமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்யவும். அதன்பின் ஷாம்பூ கொண்டு தலையை அலசிவிட்டு, மீண்டும் ஒரு கப் தண்ணீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, மீண்டும் தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே, பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.

பூண்டு பூஞ்சைகளை அழிக்கவல்லது. அதனால் பாக்டீரியாக்களால் உண்டாகும் பொடுகுத் தொல்லையையும் போக்கும். நன்கு துருவிய பூண்டைத் தேனுடன் சேர்த்துக் கலந்து, வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டு, பின்னர் தலையை அலசவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here