முதல்வராக முயல்கிறாரா ? செந்தில்பாலாஜி ....... எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதையடுத்து தனி அணியாகச் செயல்பட்டுவந்த தினகரனுக்கு முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முதல்வராக முயல்கிறாரா ? செந்தில்பாலாஜி ....... எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதையடுத்து தனி அணியாகச் செயல்பட்டுவந்த தினகரனுக்கு முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி 


மத்திய அரசில் உள்ள சிலரின் முயற்சியுடன் செந்தில்பாலாஜி முதல்வராகத் திட்டமிட்டதாக அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதையடுத்து தனி அணியாகச் செயல்பட்டுவந்த தினகரனுக்கு முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி ஆதரவளித்தார். மேலும், முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததால் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “செந்தில்பாலாஜி குறித்து ஒரு தகவலை மட்டும் கூறிக்கொள்கிறேன். அவர் ஏன் தினகரன் கட்சியில் வேகமாகச் செயல்பட்டுவருகிறார் என்றால், எப்படி இருந்தாலும் தினகரன் சிறைக்குச் சென்றுவிடுவார். தான் முதல்வராகிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவர் உள்ளார்” என்று கூறினார்.

மேலும், “மத்திய அரசில் உள்ள சிலரிடம் தொடர்புகொண்ட செந்தில்பாலாஜி தன்னை முதல்வராக்கச் சொல்லி கேட்டாரா, இல்லையா என்பதையும், சென்னையில் மத்திய அரசோடு தொடர்பில் இருப்பவரைத் தொடர்புகொண்டு என்னை முதல்வராக்குங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாரா, இல்லையா என்பது குறித்தும் செந்தில்பாலாஜி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறிய தங்கமணி, “தினகரன் எப்போது உள்ளே போவார்? தான் எப்போது முதல்வராவோம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்தான் செந்தில்பாலாஜி” என்று விமர்சனமும் செய்தார்.

மேலும் தங்கமணி, “அங்கு தினகரனை எதிர்த்து யாரும் பேச முடியாது. இதற்கு உதாரணம் சமீபகாலமாக தங்க.தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதில்லை. கடந்த 2006ஆம் ஆண்டு கரூருக்கு வேறு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வதாக இருந்தது. அப்போது செந்தில்பாலாஜி சசிகலா குடும்பத்தை பிடித்து, பட்டியல் வெளியாகும் நாளில் காலையில் ஜெயலலிதாவைச் சந்தித்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் அவர்களுக்கு விசுவாசமாக அவர் பேசுகிறார். என்னை எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் ஆக்கியது ஜெயலலிதாதான். எனவே நான் சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கத் தேவையில்லை” என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here