உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள்தான் மதிப்பெண் சான்றிதழ்களில் அச்சிடப்படும். எனவே, அதில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்கு தேர்வுத் துறை கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 23ஆம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிஇஓக்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதிக்குள் அந்த விபரங்களை, தேர்வுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, “மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக மனுக்கள் அனுப்பப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராத தொகையை சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக