சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணக் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உட்பட தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள், இடைக்கால உத்தரவு நகல்கள் உள்ளிட்டவற்றை உரிய கட்டணம் செலுத்தியும் சரியான நேரத்தில் பெற முடிவதில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து சரியான நேரத்தில் உத்தரவு நகல்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று (ஏப்ரல் 21) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில், நான்கு நீதிபதிகள் மற்றும் தலைமைப் பதிவாளர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக