காங்கிரஸ் கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் முடிவு! கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியோ, புரிந்துணர்வோ வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு, அது குறித்து வரைவு தீர்மானம் நிறைவேற் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காங்கிரஸ் கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் முடிவு! கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியோ, புரிந்துணர்வோ வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு, அது குறித்து வரைவு தீர்மானம் நிறைவேற்


காங்கிரஸுடன் புரிந்துணர்வுடன் இணக்கமாகச் செயல்படுவதா, வேண்டாமா என்ற கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியின் மத்தியக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியோ, புரிந்துணர்வோ வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு, அது குறித்து வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் உறவை விரும்பவில்லை.

கடந்த புதன்கிழமையன்று (ஏப்ரல் 18) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தேசிய மாநாடு ஹைதராபாதில் தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில், தான் காங்கிரஸ் கட்சியின் சார்பாகச் செயல்படவில்லை என்றும், பாஜகவை வீழ்த்துவதே தனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 20) காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்த கொள்கைகள், எல்லா வாய்ப்புகளையும் எதிர்க்கொள்ளும் வகையில் இருக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மத்தியக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட வரைவு தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. புரிந்துணர்வுடன் செயல்படுவது என்ற வார்த்தை, அந்த வரைவு தீர்மானத்தில் இருந்து நீக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வோ, தேர்தல் கூட்டணியோ மேற்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, “காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி மேற்கொள்வது தற்போதைய பிரச்சினை இல்லை. புரிந்துணர்வைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற வளாகத்தினுள் சில பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவது மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புவாதத்துக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று மதியம் 3 மணியளவில் மாநாட்டின் இடையே வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீதாராம் யெச்சூரி, திருத்தம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார். இந்த முடிவுக்கு, 17க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கட்சியின் விதிகளில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சட்டத்தில் இருக்கும் இடைவெளி குறித்து கட்சி மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்றும், அதனைத் திருத்தம் செய்வதற்கான தேவையை அறிந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தெரிவித்தார் யெச்சூரி. இதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here