வடகொரியா அறிவிப்பு: வரவேற்கும் அமெரிக்கா ஜப்பான்! ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் வுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாக - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வடகொரியா அறிவிப்பு: வரவேற்கும் அமெரிக்கா ஜப்பான்! ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் வுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாக



கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது வடகொரியா. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கேற்றாற்போல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவின் மீது தாக்குதல் நடத்தும் தொனியில் கருத்து தெரிவித்து வந்தார். அதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன்னும் தொடர்ந்து பதிலளித்தார்.

இந்த நிலைமையில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வரும் வாரம் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னைச் சந்திக்கவுள்ளார் கிம் ஜோங் வுன். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 20) வடகொரியாவில் நடைபெற்றுவந்த ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் கிம் ஜோங் வுன். அது மட்டுமல்லாமல், அணு ஆயுத சோதனைத்தளமொன்றும் மூடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைத் தெரிவித்துவிட்டதாகவும், இனிமேல் அந்தச் சோதனைகள் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வடகொரியாவின் இந்த அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து தனது ட்விட்டர் கணக்கில் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் நிறுத்த, மிகப்பெரிய சோதனைத்தளத்தையும் மூட ஒப்புதல் தெரிவித்துள்ளது வடகொரியா. இது உலகநாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் ஒரு நற்செய்தியாகும். இது மிகப்பெரிய முன்னேற்றம். நமது சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்களின் சந்திப்பு ஜூன் மாதம் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் இந்த முடிவினை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே. அதே நேரத்தில் இந்த அணு ஆயுதத் தடையானது முழுமையானதாகவும் சரிபார்க்க வேண்டியதாகவும் உள்ளதென வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியா – தென்கொரியா சந்திப்பு மற்றும் அமெரிக்கா – வடகொரியா சந்திப்பு வெற்றி பெறுவதற்குத் தேவையான நேர்மையான சூழலைத் தற்போது வடகொரியா உருவாக்கித் தந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளது தென்கொரிய அதிபரின் அலுவலகம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பெடரிகா மோஹரினி, இது நீண்டகால அறைகூவலுக்குப் பிறகு கிடைத்த முடிவு என்றும், இது மாற்ற முடியாததாகவும் சரிபார்க்க வேண்டியதாகவும் இருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த அறிவிப்பினால், நல்ல நம்பிக்கையோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்று கூறியுள்ளது பிரிட்டன்.

வடகொரியாவின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்துவந்த சீனா, இந்த அறிவிப்பினால் கொரிய தீபகற்பத்தில் நல்ல சூழல் உருவாகுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் தங்களது படைகளை வடகொரிய எல்லைப்பகுதியில் இருந்து திரும்பப் பெற வேண்டுமென்று தெரிவித்துள்ளது ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

உலக நாடுகள் வரிசையாக வடகொரிய அதிபரின் அறிவிப்பினை வரவேற்றுள்ளன. ஆனாலும், பொருளாதாரத் தடையில் இருந்து மீளவே அந்நாடு இத்தகைய முடிவினை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here