மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை!
இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் சித்தாந்தங்களும் மனிதநேய அடிப்படையில் உருவானவை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை இந்தியா பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு டெல்லியில் நேற்று(ஏப்ரல் 30) நடைபெற்ற விழாவில் இலங்கை, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புத்த துறவிகள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த விழாவில் பேசும்போது, புத்தரின் போதனைகள் அனைத்தும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அத்தகைய போதனைகள் இங்கு உருவானவை என்பதால் மொத்த இந்தியாவும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், “மற்றவர்களின் சித்தாந்தங்களையோ, நாட்டையோ தாக்கும் வரலாறோ, பாரம்பரியமோ இந்தியாவுக்கு இருந்தது கிடையாது. மதங்களுக்குள் உயர்வு, தாழ்வுப்படுத்திப் பார்க்கவும் நாம் முயற்சித்ததில்லை. இன்றைய காலகட்டத்தில், மனித நேயம் மற்றும் கருணை ஆகியவை மிகவும் தொடர்புடையவையாக உள்ளன” என்று தெரிவித்தார்.
விழாவில் கலந்துகொண்ட புத்த துறவுகளுக்கு ‘சங்க் தானா’ என அழைக்கப்படும் நன்கொடையையும் மோடி வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக