தர்பூசணியின் பயன்கள்:
தர்பூசணி கோடைக்காலத்தில் தாகத்தையும், களைப்பையும் தணிக்கக்கூடிய அற்புதமான பழம்.
இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தைச் சேர்ந்தது.
தர்பூசணி அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முலாம் பழத்தின் பயன்கள்:
முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
முலாம் பழத்தைச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.
அஜீரணத்தைக் குணப்படுத்தும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு.
முலாம் பழச் சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாய்ப் புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
நுங்கின் பயன்கள்:
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீரின் பயன்கள்:
கொதிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.
கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.
காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உடலுக்கு ஊக்கமும், சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.
சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது.
இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. இது தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக