பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!


அமெரிக்காவில் 5 மாதங்களில் 22 முறை பள்ளி வளாகத்தினுள் துப்பாக்கிச் சூடு நடந்தது பயத்தை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில்,தற்போது மேலும் ஒரு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள டெக்சாஸ் நகரின் சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 9 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத சட்ட அமலாக்க அதிகாரி ஒருவரும் இந்தத் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார்.

இது குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறுகையில், ”சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், டிமிட்ரியோஸ் பகோர்ட்டிஸ் (Dimitrios Pagourtzis) என்பவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. டிமிட்ரியோஸின் தந்தை சட்டபூர்வமாக வைத்திருந்த துப்பாக்கியை இவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே சமயத்தில், டெக்சாஸ் பகுதியில் இதுபோன்று துப்பாக்கிச் சூடு மறுபடியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமும் இதுதான். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது கடந்த ஏழு நாட்களில் மூன்றாவதாக நடக்கும் துப்பாக்கி சூடு மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 22ஆவதாக நடக்கும் துப்பாக்கி சூடாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். டெக்சாஸில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here