பருவநிலை மாற்றத்தால் பெரும் இழப்பு! பருவநிலையின் கடுமையான தாக்கங்களின் நேரடி விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 விழுக்காட்டை இழந்து வருவதாக துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மே 20ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ‘மேனேஜ்’ என்ற நிகழ்ச்சியில் வேளாண்  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பருவநிலை மாற்றத்தால் பெரும் இழப்பு! பருவநிலையின் கடுமையான தாக்கங்களின் நேரடி விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 விழுக்காட்டை இழந்து வருவதாக துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மே 20ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ‘மேனேஜ்’ என்ற நிகழ்ச்சியில் வேளாண் 

.

மே 20ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ‘மேனேஜ்’ என்ற நிகழ்ச்சியில் வேளாண் அறிவியலாளர்களுடனும், மேலாண்மை வல்லுநர்களுடனும் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். அப்போது அவர், “2020ஆம் ஆண்டு முதல் இந்நூற்றாண்டின் இறுதி வரை வேளாண் உற்பத்தியில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கும். இதுபற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க விவசாயிகளுடன் இணைந்து ஒன்றிய அரசு பணியாற்றி வருகிறது. பல வருடங்களாகப் பின்பற்றப்படும் வழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வரப் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிக முக்கியம். பருவநிலைக்கு ஏற்ற வேளாண்மையை விரிவுபடுத்த ’மேனேஜ்’ ஒரு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்” என்று கூறினார்.

பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்திக்க பல்வகையான பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சியளிக்குமாறு மேனேஜ் போன்ற அமைப்புகள் முன்வர வேண்டும் என்று வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். விவசாயத்தில் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர் பேசும்போது, வேளாண் பட்டதாரிகளும், முதுநிலைப் பட்டதாரிகளும் விவசாயிகளுடன் கண்டிப்பாக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று கூறினார். அதிகமான உள்ளீட்டுச் செலவுகள், சிறு மற்றும் குத்தகை விவசாயிகள், உற்பத்தி இழப்பு, உற்பத்தியில் நிலையின்மை, பருவநிலை மாற்றம், வறட்சி, மழையை மட்டும் சார்ந்த சாகுபடி, தரமற்ற நீர்ப்பாசன முறைகள், கடன்கள் போன்ற காரணங்களாலேயே இந்தியாவில் விவசாய நெருக்கடி ஏற்படுவதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.

வேளாண்மையில் முதலீடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசுகையில், “இந்தியாவில் உணவு உற்பத்தி வலுவாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும், விவசாயிகள் தங்களது முதலீட்டிலிருந்து போதுமான வருவாயை ஈட்ட முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. பல குடும்பங்களுக்கு விவசாயம் ஒரு ஈர்ப்பில்லாத தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்” என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here